இரண்டாம் திருமணத்தை படு எளிமையாக முடித்த அமலா பால் – புது கணவர் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ.

0
745
- Advertisement -

தமிழில் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. 2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இயக்குனர் விஜய் ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற சில செய்திகளும் கிசுகிசுக்கப்பட்டு வந்த வண்ணம் இருந்தது. இப்படி ஒரு நிலையில் அமலா பலருக்கு அவரது ட்ராவல் பார்ட்னர் ஜகத் தேசாய் என்பவர் ப்ரொபோஸ் செய்து அவரது ப்ரோபோசலை அமலா பால் ஏற்ற நிலையில் தற்போது ப்ரொபோஸ் செய்த 10 நாளில் திருமணத்தை முடித்துள்ளார் அமலா பால்.

- Advertisement -

இது ஒருபுறம் இருக்க நடிகை அமலா பால் பிரபல பாடகர் பவிந்தர் சிங் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.விந்தர் சிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அமலா பாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அடிக்கடி வைரலானது. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி பவிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பாலுடன் மணக்கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

இரண்டாம் திருமண சர்ச்சை :

இதனால் அமலா பாலுக்கு இரண்டாம் திருமணம் நடைபெற்று விட்டது என்று பல்வேறு இணையதளத்திலும் செய்திகள் பரவியது..ஆனால், அந்த பதிவினை ஒரு சில மணி நேரத்திலேயே பவிந்தர் சிங் நீக்கி விட்டார். இந்த நிலையில் அமலா பால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று அமலா பால் தரப்பு விளக்கமளித்தனர். இப்படி ஒரு நிலையில் நடிகை அமலா பால் பவிந்தர் மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்து இருந்தார்.

-விளம்பரம்-

அமலா பால் தொடர்ந்த வழக்கு :

அந்த மனுவில் முன்னாள் நணபர் பவ்னிந்தர் சிங் தன்னுடன் எடுத்த புகைப்படங்களையும் தனக்கும் அவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக குறிப்பிட்டு வெளியிட்டுள்ளதாகவும் புகைப்படங்களையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பவ்னிந்தர் சிங்க்கு எதிராக சிவில் அவதூறு வழக்கு தொடர நடிகை அமலா பாலுக்கு அனுமதி அளித்திருந்தார்.

பாவந்தர் சிங்கை கைது செய்த போலீசார் :

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம அமலா பாலின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட பவ்னீந்தர் சிங்குக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இப்படி ஒரு நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே நடிகை அமலா பால் தனக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருந்தபோது பவ்னிந்தர் சிங் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்தார். இருவரும் தங்கி இருந்த போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாகம் புகார் அளித்துஇருந்தார். அமலா பால் அளித்த புகாரின் பெயரில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பாவந்தர் சிங்கை கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement