‘திடீர்னு கட்டி புடிச்சி முத்தம் கொடுத்தா’ மாயா மீது ஏற்கனவே பாலியல் புகார் அளித்துள்ள ஆடை பட நடிகை.

0
431
- Advertisement -

பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு இருக்கும் சம்பவம் தான் நேற்றிலிருந்து பெரும் சர்ச்சியான ஒரு விஷயமாக பேசப்பட்டு வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் பிரச்சனைகள் இருந்து விலகி பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வேறு ஒரு புதிய பஞ்சாயத்தை கிளப்பி விட்டார்கள். இதனால் கமல் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்து பிரதீப்பிற்கு எதிராக ரெட் கார்டு கொடுக்கலாமா என்று கேட்டிருந்தார்.

-விளம்பரம்-

இதில் அன்ன பாரதி, விசித்ரா, அர்ச்சனாவை தவிர மற்ற அனைத்து பெண்களும் பிரதிப்பை வெளியில் அனுப்பலாம் என்று ஒரு மனதாக தேர்வு செய்தார்கள் இதனால் நிகழ்ச்சியிலிருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டார்.அதிலும் குறிப்பாக பிரதீப் வெளியேறியதை மிகவும் கொண்டாடியது மாயா மற்றும் பூர்ணிமா தான். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான சில போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்த சீசனில் மக்களுக்கு பரிச்சயமான நபர்களில் மாயா கிருஷ்ணனும் ஒருவர். இவர் நடன கலைஞர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தனியாக ஒரு நாடக குழு ஒன்று நடத்தி வருகிறார். இவர் நடனம் மட்டும் இல்லாமல் வானவில், தொடரி, மகளிர் மட்டும், விக்ரம் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான லியோ படத்திலும் இவர் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் மாயா குறித்த பழைய சர்ச்சையான தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஐந்து வருடங்களுக்கு முன்பு மாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகி அனன்யா என்பவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். அதில் அவர், மாயா கிருஷ்ணனை நான் 2016 ஆம் ஆண்டு தான் முதலில் சந்தித்தேன். அப்போது எனக்கு 18 வயது. அவர் நிறைய எனக்கு ஆலோசனைகளை சொன்னார். ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் நன்றாக பழக ஆரம்பித்து விட்டோம்.

-விளம்பரம்-

அப்போது அவர், நான் அவருடன் மட்டும் தான் பழக வேண்டும் என்று நினைத்தார். என்னிடம் பேசும் நண்பர்களை எல்லாம் அவர் ஏதோ ஒரு காரணங்களை சொல்லி விலக வைத்தார். அது மட்டும் இல்லாமல் என் பெற்றோர்களிடம் இருந்து என்னை ஒதுக்க நினைத்தார். இப்படி இருக்கும் போது ஒருநாள் திடீரென்று அவரை என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அதனை அடுத்து பாலில் ரீதியாகவும் என்னை அவர் துன்புறுக்க செய்தார் என்று கூறியிருந்தார்.

இதனை அடுத்து மாயா, என்னை பற்றி அனன்யா சொன்னது அத்தனையுமே பொய்.என் இடம் விசாரணை நடத்த போலீசுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அவர் வேண்டுமென்று என் மீது பொய்யான புகார்களை கொடுக்கிறார். இதனால் அவர் மீது நான் வழக்கும் தொடர இருக்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி சில வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயத்தை தற்போது மாயா, பிரதீப்பில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி இருக்கும் நிலையில் வைரலாக்கி வருகிறாரார்கள்.

இப்படிப்பட்ட ஒரு நபர் எப்படி பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்துவருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த வாரம் வரை பரதீப் என்னுடைய அண்ணன், நான் பிக் பாஸ் பட்டதை வென்றால் அதில் வரும் 50 லட்சம் பணத்தை பிரதீப்பிற்கே கொடுத்துவிடுகிறேன் என்று கூறியதோடு பிரதீப்பின் கையில் முத்தமும் கொடுத்து இருந்தார் மாயா. அதனையும் தற்போது நெட்டிசன்கள் சுட்டிகாட்டி வருகின்றனர்.

Advertisement