சமீபத்தில் பிறந்த தனது மகளுக்கு முதல் விழாவை நடத்தி இருக்கிறார் புகழ் – என்ன ஸ்பெஷல் தெரியுமா?

0
467
Pugazh
- Advertisement -

சம்பீத்தில் பிறந்த தந்து மகளுக்கு முதல் விழாவை நடந்தி இருக்கிறார் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். கடந்த இரண்டு சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. அதிலும் 1947 படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், ஒரு சில படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

புகழின் காதலி :

இப்படி ஒரு நிலையில் புகழ், பேன்ஸி என்பவரை 5 வருடங்களாக காதலித்து வந்தார். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய புகழ், ஐந்து வருடமாக நாங்கள் காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு ஆடிஷன் போகும்போது இருந்தே தெரியும். அவர் பெயர் பென்சி. நாங்கள் இந்த வருடம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம். கூடிய விரைவில் எங்கள் கல்யாணத்தைப் பற்றி சொல்கிறோம் என்று கூறி இருந்தார்.

சமீபத்தில் பிறந்த மகள் :

இதனால் இவர்கள் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலரும் எதிர்பாத்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது திருமணத்தை முடித்தார் புகழ். திருமணத்திற்கு பின்னரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து அசத்தி இருந்தார். இப்படி ஒரு நிலையில் புகழ் மனைவி பேன்ஸி கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.

-விளம்பரம்-

மகளின் பெயர் :

இப்படி ஒரு நிலையில் தனது மகளுக்கு ரித்தன்யா என்று பெயர் வைத்துள்ளார் புகழ். இதுகுறித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள புகழ் ‘ என் வாழ்வை புன்னகையால் இன்புறச் செய்ய தவமாய் கிடைத்த அழகியடி நீ.. கம்பன் இன்றிருந்தால் உனக்கென தனிக்கவிதையே வடித்திருப்பானடி… ஊரே கண் வைக்கும் அளவிற்கு, பிரம்மன் வடித்த காவியம் நீயடி என் செல்ல மகளே. கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை.

மகளின் முதல் விழா :

இருந்தாலும், எங்கள் வாழ்வை வசந்தமாக்கிய எங்கள் தேவதை தனித்து தெரியவே, இன்று முதல் நீ, பு.ரித்தன்யா என்று அழைக்கப்பட இருக்கிறாய் அன்பு மகளே. எங்களின் மகாராணிக்கு பு.ரித்தன்யா என்ற பெயரை வைத்துள்ளோம் என்பதை என் அன்பு உறவுகளுக்கு தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் மகளுக்கு பெயர் சூட்டி தொட்டிலில் போடும் விழாவை நடத்தி இருகிறார்.

Advertisement