பார்த்திபனை அசிங்கம் படுத்திய அமேசான் நிறுவனம் – மன வேதனையில் பார்த்திபன் வெளியிட்ட வீடியோ

0
571
parthiban
- Advertisement -

இரவின் நிழல் படம் குறித்து அமேசான் பிரைம் நிறுவனம் வெளியிட்ட கமெண்ட்ஸ் பார்த்து பார்த்திபன் மனம் வருந்தி வெளியிட்டிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். அந்த வகையில் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘விக்டோரியா’ என்னும் ஜெர்மானிய திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. அது ஆஸ்கர் விருதின் இறுதி வரை சென்றிருந்தது. பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

- Advertisement -

இரவின் நிழல் படம்:

அகிரா புரோடக்சன் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், பிரபலங்கள் பலரும் பார்த்திபனின் முயற்சியை பாராட்டி இருந்தார்கள். ஆனால், வழக்கம் போல் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ஸ்டைலில் இரவின் நிழல் படத்தை விமர்சித்து இருந்தார். அதிலும் இவர், பார்த்திபன் இதை உலகிலேயே நான்லீனியர் படம் என்று சொன்னார். ஆனால், ஏற்கனவே 2013 இல் ஈரானில் fish & cat என்ற படம் வந்து விட்டது.

படம் குறித்த சர்ச்சை:

ஒரு இயக்குனர் ஒரு நல்ல படத்தைக் கொடுத்தால் போதும். அதற்கு இந்த மாதிரி எல்லாம் சொல்வது அர்த்தமற்ற ஒன்று என்று படம் குறித்தும் பார்த்திபன் குறித்தும் ப்ளூ சட்டை மாறன் கூறியிருந்த கருத்து சோசியல் மீடியாவில் சர்ச்சை ஆகி இருந்தது. இதனை அடுத்து ப்ளூ சட்டையின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பார்த்திபன் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அது மட்டும் இல்லாமல் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால் இரவின் நிழல் படம் குறித்து நன்றாக விமர்சனம் செய்கிறேன் என்று ப்ளூ சட்டை மாறன் கூறியதாகவும் பார்த்திபன் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

அமேசான் ஓடிடி நிறுவனம் சொன்னது:

இப்படி இரவின் நிழல் படம் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் மீண்டும் இரவின் நிழல் படம் குறித்த சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, இரவின் நிழல் படத்தை அமேசான் ஓடிடியில் வெளியாகும் என்று பார்த்திபன் அறிவித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் பார்த்திபனையும், இரவின் நிழல் படத்தையும் அமேசான் நிறுவனம் அசிங்கப்படுத்தி இருக்கிறது. இரவின் நிழல் திரைப்படம் முதல் நான்லீனியர் சிங்கிள் ஷார்ட் திரைப்படமே கிடையாது.

பார்த்திபன் வெளியிட்ட வீடியோ:

இயக்குனர் பார்த்திபன் சொல்வதெல்லாம் பொய். இது இரண்டாவது நான் லீனியர் திரைப்படம் என்று குறிப்பிட்டு இருந்தது. இப்படி ஓடிடி நிறுவனம் கூறியதை அடுத்து பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், பிரைமில் வெளியாவது முதல் மகிழ்ச்சி. எனக்கு எதுவுமே சுலபமாக நடப்பதில்லை. இந்த படத்திற்கு அவர்கள் எந்த ப்ரமோஷனும் வெளியிடவில்லை. அதிலிருந்த கமெண்ட்ஸ் ரொம்ப ஷாக்கிங் ஆக இருந்தது. படத்தை தவறாக விமர்சனம் பண்ணுவதில் எனக்கு உடன்பாடில்லை. இதெல்லாம் நம்மால் மாற்ற முடியுமா? என்று தெரியவில்லை. எனக்கு சினிமாவை தவிர மற்ற விஷயங்களை பற்றி பெரியதாக தெரியாது என்று மன வேதனையுடன் பார்த்திபன் பேசியிருக்கிறார்.

Advertisement