‘கேஸ் சிலிண்டர், பி.பி மாத்திரை, மளிகை’ – குஷ்பூவின் 1000ரூபாய் கருத்திற்கு அம்பிகா நச் பதிலடி.

0
490
- Advertisement -

மகளிர் உதவித்தொகை குறித்து குஷ்பு கூறிய கருத்துக்கு நடிகை அம்பிகா கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் போதை பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது. இதில் கலந்து கொண்ட குஷ்பூ, தயாரிப்பாளர் ஜாபர் இடம் மட்டும் சுமார் 3000 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதைப்பற்றி திமுக கூட்டணி கட்சிகள் ஏதாவது வாய் திறந்ததா? இல்லை. காரணம், அந்த ஜாபர் சாதிக் திமுகவுக்கும் பணம் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு அவர்கள் ஓட்டு போட்டு விடுவார்களா? தாய்மார்களின் நீண்ட நாள் கோரிக்கையே டாஸ்மாக்கை இழுத்து மூடுவது தான். தில் இருந்தால் நீங்கள் அதை செய்யுங்கள் பார்க்கலாம். போதை பொருள் பிரச்சனையை நீங்கள் தீர்த்து வைக்கவில்லை. தாய்மார்கள் எல்லோரும் பள்ளி, கல்லூரிக்கும் போகும் தங்களுடைய பிள்ளைகள் போதைக்கு அடிமையாகி விடுவார்களோ? என்று பயந்து கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் திமுகவை விமர்சித்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

குஷ்பூ சொன்ன சர்ச்சை கருத்து:

இப்படி குஷ்பூ மகளிர் உரிமை தொகையை பிச்சை என்று கூறி இருந்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. இது குறித்து அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக நடிகை அம்பிகாவும் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும் சரி அவர்கள் உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ அதனை ஏற்றுக் கொண்டு பாராட்டுங்கள். பாராட்ட மனம் இல்லை என்றால் அமைதியாக இருங்கள்.

-விளம்பரம்-

அம்பிகா பதிவு:

பிச்சை என்று அவமானப்படுத்தும் சொற்களை பயன்படுத்தாதீர்கள். ஐந்து ரூபாய் கொடுத்தாலும் அது உதவி தான் என்று கூறியிருக்கிறார். இப்படி அம்பிகா கூறி இருந்ததற்கு பலருமே விமர்சித்தும், இவர் அரசியலில் நுழைவதற்கு தான் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று கிண்டல் அடித்து வருகிறார்கள். மேலும், இது தொடர்பாக அம்பிகா பேட்டியில், இதை நான் அரசியலாக பார்க்கவில்லை. வீட்டு வேலை செய்யும் பெண்களின் பணிகளை அங்கீகரித்து அரசாங்கம் ஒரு விஷயத்தை செய்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இது ரொம்ப ரொம்ப நல்ல திட்டம்.

அம்பிகா பேட்டி:

அந்த ஆயிரம் ரூபாய் எப்படி எல்லாம் உதவியாக இருக்கும் என்று வீட்டு பெண்களுக்கு தான் தெரியும். அதை வைத்து ஒரு சிலிண்டர் வாங்கலாம், மருந்து செலவுக்கு பயன்படும். அதோடு ஒரு சின்ன குடும்பத்துக்கு ஒரு மாத மளிகை செலவுக்கு போதும் .இப்படி இருக்கும்போது இந்த பணத்தை பிச்சை என்று சொன்னதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. பேசுற விஷயம் ரொம்பவே சீரியஸா என்று தெரியாமல் குஷ்பு பேசி விட்டார்கள். ஆனால், அது ரொம்பவே தப்பான பேச்சு. என்னை பொருத்தவரை நல்ல விஷயம் என்றால் பாராட்ட வேண்டும்.

குஷ்பூ குறித்து சொன்னது:

மேலும், நான் என்னுடைய கருத்தை சொன்னேன். உடனே நீங்கள் திமுக வா? அதிமுக வா? அரசியலுக்கு வரப்போகிறீர்களா? என்றெல்லாம் கேட்கிறார்கள். ஒரு சிலர் என்னை விமர்சித்தும் இருக்கிறார்கள். நான் எந்த கட்சியும் இல்லை. எந்த கட்சியிலும் இணைவதும் இல்லை. என்னை திட்டுபவர்களை பற்றி நான் கவலைப்படவும் இல்லை. அதோடு எனக்கு கோபமும் வரவில்லை. அவர்கள் பாட்டுக்கு திட்டிக்கொண்டு போகட்டும். நான் எந்த ஒரு கட்சியில் இல்லை என்று கூறுகிறார்.

Advertisement