‘இறைவா, தங்கமான மனிதர்’ – மருத்துவமனையில் இருக்கும் சேஷு குறித்து இயக்குனர் மோகன் ஜி போட்ட பதிவு.

0
639
- Advertisement -

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் லொள்ளு சபா காமெடி நடிகர் சேஷு குறித்து இயக்குனர் மோகன் ஜி பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக திகழ் பவர் லொள்ளு சபா சேசு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் சந்தானம், ரோபோ சங்கர் போன்ற பல பிரபலங்கள் தமிழ் சினிமா உலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சேசு. இவர் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தான் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். அதற்கு பின் இவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் மாறன், சந்தானம், ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்ட லொள்ளு சபா நிகழ்ச்சியின் முதல் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது.

- Advertisement -

நடிகர் சேசு திரைப்பயணம்:

அதன் பின் இவர் வீராப்பு, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், திரௌபதி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வடிவேலு நடிப்பில் வெளியாகி இருந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் இவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பூமர் அங்கிள், ராயர் பரம்பரை போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இவர் வெள்ளி திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதி :

இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இவரது காமெடி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ரசிகப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இவர் திடீர் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சமீபத்தில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

மோகன் ஜி பதிவு :

அங்கே இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரது சிகிச்சை உதவி கேட்டு காமெடி நடிகர் அமுதவாணன் கூட வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும், இவர் விரைவில் குணமடைந்து வர பலரும் வேண்டி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சேஷு குறித்து பதிவிட்டுள்ள இயக்குனர் மோகன் ஜி ‘இறைவா… தங்கமான மனிதர்.. குணப்படுத்தி அனுப்பு.. சேசு அண்ணன் குணமாக அனைவரும் பிரத்தனை செய்யுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

சேஷுவின் ஈகை குணம் :

சேஷு ஒரு காமெடி நடிகர் என்பதை தாண்டி ஒரு சிறந்த மனிதர். நடிகர் மயில்சாமி போல மக்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்துள்ளார். இதுவரை ஆறு ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் சேது. மேலும், இந்த ஆண்டிற்குள் மேலும் பல திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

Advertisement