அனைவரும் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது. யார் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டு இருக்கிறார்கள். வாக்குகள் அடிப்படையில் ராஜு தான் டைட்டில் வின்னர் என்றும் சோசியல் மீடியாவில் பலரும் கூறி வருகின்றனர். மேலும், இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். இதில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்தவர் அமீர். அமீர் ரசிகர்களுக்கு புதிய முகம் தான். கடந்து வந்த பாதை டாஸ்கில் அமீர் பேசிய கதையை கேட்டு பலரும் கலங்கி இருந்தார்கள்.
அதுவும் அம்மாவின் உடலை அடக்கம் செய்ய கூட காசு இல்லாமல் வீட்டில் உள்ள டிவி சோபாவை விற்றேன் என்று அமீர் சொன்ன போது அனைவரின் நெஞ்சும் பதறியது. அமீரின் தந்தை இவர் 1வயது இருக்கும் போதே இறந்துவிட்டார். பின்னர் அமீர் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே இவரது அம்மா கொலை செய்யப்பட்டுவிட்டார். ஆனால், அவர் அம்மா இறந்த காரணத்தை சொல்லாமல் மறைத்து விட்டார். யாருடைய ஆதரவும் இன்றி தன்னுடைய வாழ்க்கையை வாழ தொடங்கின அமீர்.
அமீர் குடும்ப நிலை:
பின் தன் அம்மா ஆசைப்பட்டபடி ஒரு நடன பள்ளியை துவங்கி இருக்கிறார். அதில் முதல் மாணவிகளாக சேர்ந்தவர்கள் தான் ஆலனா, ஆயிஷா. இவர்கள் தான் அமீர் வாழ்க்கையை மாற்றினார்கள். இவருக்கு ஆதரவாக இருந்தவர் இவர்கள் அம்மா ஷைஜி மேம் தான். அந்த குழந்தைகளின் அம்மாவான அஷ்ரப் – ஷைஜி என்பவர்கள் தான் அமீரை வீட்டுக்கு அழைத்து சென்று வளர்த்ததாக கூறியிருந்தார். இவர் கிறிஸ்டியனாக இருந்தார். பின் அவர்களுக்காக தான் அமீர் முஸ்லிமாக மாறினார். பின் பல நிகழ்ச்சியில் அமீர் நடன இயக்குனராக பணியாற்றி வந்து உள்ளார்.
அமீருக்கு ஏற்பட்ட விபத்து குறித்த வீடியோ:
இப்படி ஒரு நிலையில் அமீருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து அவரை வளர்த்த பெற்றோர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பது, எல்லோரும் அவனுக்கு நடந்த விபத்து பற்றி கேட்டு இருந்தார்கள். உண்மையாக என்ன நடந்தது என்னென்ன, இவன் காரை விட்டு இறங்கும்போது ஹேண்ட் பிரேக் போடாமல் இறங்கி வந்து விட்டான். இவன் ஒரு 14 ,15 மீட்டர் நடந்து இருப்பான். அதுக்குள்ள கார் பின்னாடியே வந்தது. இவன் காரை தடுத்து நிறுத்துவதற்காக கையை வைத்து தடுத்து நிறுத்த முயன்றான்.
அமீர் இறந்துட்டான் என்று தான் நினைத்தோம்:
ஆனால், முடியல கார் டயர் அவன் கால் தொடை மீது ஏறி போய் குழிக்குள் விழுந்து விட்டான். இவனுக்கு மேல கால் இருந்தது. காருக்கும் இவனுக்கும் இடையில் ஒரு இஞ்ச் தான் இடைவெளி இருந்தது. அந்த இடம் இல்லை என்றாலும் அந்த கார் அவன் மேல விழுந்து அங்கேயே இறந்துட்டுப்பான். எங்களுக்கு தகவல் சொன்னவர்கள் அவன் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. அவன் இறந்துவிட்டான் என்று தான் சொன்னார்கள். அந்தப் பதட்டத்தில் தான் நாங்கள் பயந்து போனோம். அப்படியே பொறுமையாக அவனை வெளியே எடுத்து மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்தோம். இன்னும் எங்களால் மறக்க முடியாது. அந்த அளவிற்கு ஒரு மிகப்பெரிய விபத்து என்றே சொல்லலாம்.
பிக் பாஸ் வீட்டில் அமீர்:
அது மட்டுமில்லாமல் அமீர் ஒரு யூனிக்கான நபர். முடியாத விஷயத்தையும் முடியும் என்று நினைப்பவர். 10 மணி நேரத்துக்கு மேல் நடனமாடி சாதனை செய்திருக்கிறார். அந்த அளவிற்கு திறமையானவர். அதேபோல் பிக் பாஸ் வீட்டில் 12 லட்சம் பணம் வைத்திருக்கும் போது எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று பலரும் பேசியிருந்தார்கள். நாங்களும் இப்ப இருக்கிற சூழ்நிலைக்கு அந்த பணம் எடுத்துட்டு வந்து விடுவான் என்று தான் நினைத்தோம். ஆனால், அவன் பணம் எடுக்க வில்லை என்றால் அவன் ஏதோ மனதில் வைத்து இருக்கிறான். எல்லாம் யோசித்து தான் செய்வான் என்று கூறி இருந்தார்கள். இவர்கள் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.