நீங்க இப்படி பண்ணலாமா..? நிடிகைக்காக முன்னணி நடிகரை வறுத்தெடுத்த ரசிகர்கள்.!

0
720
- Advertisement -

ட்விட்டரில் அலியா பட் பதிவில் இருந்த சின்ன சொற்பிழையைச் சுட்டிக்காட்டி செல்லமாகக் கடிந்துகொண்டுள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.அலியா பட், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரப் பட்டாளம் நடிப்பில் உருவாகிவரும் பிரமாண்ட சூப்பர் நேச்சுரல் படம் `பிரமாஸ்திரா’ (Brahmastra). பாலிவுட் இயக்குநர் அயன் முகர்ஜி இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

-விளம்பரம்-

alia-bhatt

- Advertisement -

படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே அமிதாப் பச்சனுடன் தான் நடிக்கும் அனுபவத்தை உற்சாகத்துடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் அலியா. படப்பிடிப்பின்போது அலியாவுக்கு ஸ்டிரிக்டான ஆசிரியராக அமிதாப் பச்சன் நடந்துகொள்வதாகப் பாலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

இந்நிலையில், நேற்றிரவு அமிதாப்புடன் பணியாற்றுவது குறித்து அலியா ட்விட்டரில் பெருமகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், `அமிதாப் பச்சனுடன் பணியாற்றுவது மிகப்பெரிய பெருமை. இன்று படப்பிடிப்பின்போது முன்னதாகவே பேக் அப் செய்துவிட்ட அமிதாப், எனக்கு ஒரு சில குறிப்புகளைக் கொடுப்பதற்காக தாமதமாகக் கிளம்பினார். ஒவ்வொரு நாளும் நிறைய, எண்ணிலடங்கா விஷயங்களை அவரிடமிருந்து கற்றுக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

aliyaa

அலியாவின் ட்விட்டர் பதிவில் சின்ன சொற்பிழை இருந்தது. `cues’ (குறிப்பு) என்னும் ஆங்கில வார்த்தைக்குப் பதில் `ques’ என்று எழுதியிருந்தார். அமிதாப் பச்சன் தன்னைப் பற்றி புகழ்ந்து எழுதியையெல்லாம் பொருட்படுத்தாமல் அலியாவின் பதிவில் இருந்த பிழையை நாசுக்காகச் சுட்டிக் காட்டிப் பதிவிட்டார். தவற்றை சுட்டிக் காட்டிவிட்டு `யூ ஆர் க்யூட்..’ என்று குறிப்பிட்டிருந்தார்.

aliya1

அலியா இயல்பாக, `ஓ… காட்… இனி இந்தத் தவறு நடக்காது!’ என்று அமிதாப் பதிவுக்கு, பதில் கூறினார். ஆனால், நெட்டிசன்ஸ் இந்த விவகாரத்தை கேஷுவலாக எடுத்துக்கொள்ளவில்லை. `பெருமகிழ்ச்சியுடன் அலியா பகிர்ந்திருந்த பதிவில் தவற்றைச் சுட்டிக்காட்டி ஏன் மூக்கை உடைக்க வேண்டும்’ என்று அமிதாப் பச்சனை விமர்சித்து வருகின்றனர்.

amita

மேலும் சில நாள்கள் முன்பு பிரமாஸ்திரா படப்பிடிப்பின்போது அலியா, ரன்பீர் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த அமிதாப், ரன்பீர் பெயருக்குப் பதில் ரன்வீர் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் சம்பவத்தைக் குறிப்பிட்டுத் `தவறு நடப்பது சகஜம்தான்’ என்று காட்டமாக அமிதாப்பை விமர்சித்து வருகின்றனர் பாலிவுட் ரசிகர்கள்!

Advertisement