ஐ லவ் யூ சுஜா ! நீதான் என் பொண்டாட்டினு சொன்னார் அவர் -சுஜா ஓப்பன் டாக்

0
26131
- Advertisement -

“பிப்ரவரி 14 – ஒரு ஆண், பெண்ணுக்கான காதலை மட்டும் வெளிப்படுத்துற நாள் அல்ல. நாம நேசிக்கிற யாரிடம் வேண்டுமானாலும் அன்பை வெளிக்காட்டலாம், யாருக்கு வேணாலும் சர்ப்ரைஸ் கொடுக்கலாம். இதுதான் என் கருத்து.” – இது நாம் ‘காதலர் தினம்’ என்ற வார்த்தையைச் சொன்ன அடுத்தநொடி வந்த பதில். உற்சாகத்துடனும் வெட்கத்துடனும் தன் காதலைப் பற்றி சுஜா வரூணி பேசியதிலிருந்து…

-விளம்பரம்-

suja-varunee

- Advertisement -

முதல் புரபோஸல்?

“ஆறாவது படிக்கும்போது ஒரு சம்பவம் நடந்துச்சு. நான் எப்போவும் ஸ்கூலுக்கு சீக்கிரமா போயிடுவேன். அப்போ, ஒருநாள் போர்டுல ‘ஐ லவ் யூ சுஜா’னு எழுதியிருந்துச்சு. கண்டிப்பா ஏதோ ஒரு பையன்தான் இப்படி எழுதிருக்கான்னு அந்தக் கையெழுத்துலேயே தெரிஞ்சுது. ஆனா, அது யார்னு எனக்குக் கடைசி வரை தெரியலை. அப்புறம், இன்னொரு நாள் வீட்டுக்கு வந்தவங்க என் புத்தகத்தை எடுத்துப் பாத்துட்டு இருந்தாங்க. என் நேரம்… அதுல ஒரு லவ் லெட்டர் இருந்துச்சு. எங்க அம்மா என்னை அடி பின்னிட்டாங்க. அதை எவன் வெச்சான்னும் தெரியலை. இப்படி முகம் தெரியாத காதல்கள்தான் நிறைய வந்திருக்கு”

-விளம்பரம்-

காதலை சொன்னபிறகு சென்ற முதல் இடம்?

“மெரினா லைட் ஹவுஸ் கீழேதான் அவர் எனக்கு புரபோஸ் பண்ணார். எங்க ரெண்டு பேருக்குள்ளே லவ் ஆனதுக்குப் பிறகு சத்யம் தியேட்டர்ல ‘ஜோதா அக்பர்’ படத்துக்குத்தான் முதல்ல போனோம்.”

முதல் கிஃப்ட் என்ன கொடுத்தீங்க. அவர் உங்களுக்கு என்ன கொடுத்தார்?

“எனக்கு வித்தியாசமான விநாயகர் பொம்மைகளைச் சேர்த்து வைக்கிறது ரொம்பப் பிடிக்கும். அதனால, அவர் செம்பருத்தி பூ மேல விநாயகர் உட்கார்ந்து இருக்கிற மாதிரி ஒரு பொம்மை கொடுத்தார். அதுதான் அவர் எனக்கு கொடுத்த முதல் கிஃப்ட். நான் அவருக்கு முதன்முதல்ல கிஃப்ட் கொடுக்கலாம்னு பிளான் பண்ணிட்டுப் போனா, கடைக்குள்ளே போனவுடனேயே குழப்பம் அதிகமாகிடுச்சு. என்ன வாங்கிறதுன்னே தெரியாம கடைசியா, ஒரு ஃப்ரேம்ல ரெண்டு பறவைகள் சேர்ந்து பறக்குற மாதிரி ஒரு பொம்மையை கிஃப்ட் பண்ணேன்.”

நீங்க கமிட்டட்னு யார்கிட்ட முதல்ல சொன்னீங்க?

“அவர் என்கிட்ட புரபோஸ் பண்ணவுடனேயே, எனக்கும் பிடிச்சிருந்தது. ஆனா, நான் எந்தப் பதிலும் சொல்லலை. அப்போ, எங்க வீட்ல இருக்கிற நாய்குட்டிகள்கிட்டதான் அவரை எனக்குப் பிடிச்சிருக்குன்னு முதல்ல சொன்னேன். என் காதல் கதையைக் கேட்ட முதல் ஆள் எங்க வீட்டு ‘பொமேரியன்’கள்தான்.”

உங்க காதல்ல சொதப்பிய சம்பவம் எதாவது இருக்கா?

“அப்படி நாங்க ரெண்டு பேரும் சொதப்பின சம்பவமெல்லாம் எதுவும் இல்லை. ஒரு முறை காதலர் தினத்தை குடும்பத்தோட கொண்டாடினோம். அதுதான் சொதப்பல்னு நினைக்கிறேன் ”

Suja-Varunee-family-compressed

உங்களுக்கு அவர் எப்படி புரபோஸ் பண்ணார்?

“மத்தவங்க மாதிரி ‘ஐ லவ் யூ’னு எல்லாம் சொல்லலை. சும்மா பேசிட்டு இருந்தப்போ, டக்குனு ‘நீதான் என் பொண்டாட்டி’னு டைரக்டா சொல்லிட்டார். இப்போ அதை நினைச்சாக்கூட எனக்கு வெட்கம் வரும்.”

அவர் உங்களை லவ் பண்ண என்ன காரணம்னு கேட்டிருக்கீங்களா, என்ன சொன்னார்?

” ‘நீ பொறுப்பான பொண்ணு. நீ முன்னாடி நின்னு உன் ஃபேமிலியை வழிநடத்துறது எனக்குப் பிடிக்கும். முக்கியமா, பிடிக்கும்-பிடிக்காதுனு ஓபனா இருக்கிறது எனக்குப் பிடிக்கும்”னு சொல்லியிருக்கார்.”

suja

உங்களுக்கு அவர் எப்படி புரபோஸ் பண்ணார்?

“மத்தவங்க மாதிரி ‘ஐ லவ் யூ’னு எல்லாம் சொல்லலை. சும்மா பேசிட்டு இருந்தப்போ, டக்குனு ‘நீதான் என் பொண்டாட்டி’னு டைரக்டா சொல்லிட்டார். இப்போ அதை நினைச்சாக்கூட எனக்கு வெட்கம் வரும்.”

அவரை லவ் பண்ண உங்களுக்கும் காரணம் இருக்கும்ல?

“அவர் என் அப்பா மாதிரி இருக்கமாட்டேன்னு சத்தியம் பண்ணது என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணுச்சு. ஒரு நல்ல அப்பாவா இருப்பேன்னு ஸ்ட்ராங்கா சொன்னது அவர் மேல இருந்த நம்பிக்கையை அதிகப்படுத்துச்சு.”

Advertisement