அன்பே சிவம் படத்தில் மாதவன் வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான் ! யார் தெரியுமா

0
504
Anbe-sivam
- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 2013 ஆம் வெளியான படம் ‘அன்பே சிவம் ‘. உலகநாயகன் கமல் நடித்த இந்த படத்தில் நடிகை கிரண், மாதவன் போன்றவர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை சுந்தர் சி தான் இயக்கினார் என்று பலருக்கும் சில காலங்கள் கழித்தே தெரியவந்தது.

anbe shivam

 

- Advertisement -

இந்த படம் வெளியான போது மக்கள் மத்தியிலும் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. ஆனால் தற்போது உள்ள ரசிகர்கள் இந்த படத்தை பார்த்த பரம்மித்துள்ளனர். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதையும் , கமலின் நடிப்பும் இருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்த படத்தின் இயக்குனர் சுந்தர் சியிடம், ரசிகர் ஒருவர் நீங்கள் எப்போது அன்பே சிவம் போன்ற படத்தை எடுக்க போகிறீர்கள் என்று கூட கேட்டிருந்தார்.

அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த படத்தில் நடிகர் மாதவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த பின்னரே சாக்லேட் பாயாக இருந்த நடிகர் மாதவன் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிறுப்பித்தார். ஆனால் இந்த படத்தில் நடிகர் கமலுடன் படம் முழுக்க பயணம் செய்யும் நடிகர் மாதவனின் கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் அரவிந்த் சாமி தான் நடிக்கவிருந்தாராம்.

aravindswamy

இந்த படத்தின் இயக்குனர் சுந்தர் சி, இந்த படத்தில் மாதவன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதன் முதலில் நடிகர் அரவிந்த் சாமியிடம் தான் அணுகியுள்ளார். ஆனால் அப்போது அரவிந்த் சாமி சற்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இதனால் நடிகர் கமலுடன் நடிக்கும் வாய்ப்பை நடிகர் அரவிந்த் சாமி தவரவிட்டார்.

Advertisement