‘இந்த நிலை மாறனும்’ – மாமன்னன் படத்தை Ottயில் பார்த்துவிட்டு அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி இதோ.

0
1963
- Advertisement -

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகிய ரசிகர் மதியம் நல்ல வரவேற்பை பெற்றது உதயநிதி கீர்த்தி சுரேஷ் வடிவேலு பஹத் பாசில் என்று பலர் நடித்து இருந்தனர். சமீபத்தில் தான் இந்த படத்தில் ஐம்பதாவது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்று இருந்தது மேலும் கலந்த சில வாரங்களுக்கு முன்னால் தான் இந்த திரைப்படம் Ott- இல் கூட வெளியாகி இருந்தது. ஆனால் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியான பின்னர் இந்த படத்தில் ஹீரோக்களாக நடித்த உதயநிதி வடிவேலுவை விட்டுவிட்டு ஜாதி வெறியர்கள் சிலர் பஹத் பாசிலை ஹீரோவாக கொண்டாடி வந்தனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸிடம் திரைப்படங்களில் நிறைய ஜாதி குறித்த பதிவுகள் மிகவும் காட்டமாக வந்து கொண்டிருக்கிறது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நீங்கள் சமீபத்தில் பார்க்க மாமனும் திரைப்படத்தை வைத்து சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ் ‘ அந்த படத்தை Ott யில் பார்த்தேன். நல்ல படம் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள் ஒரு நல்ல செய்தியை அதில் சொல்லி இருக்கிறார்கள்.

- Advertisement -

ஆனால், இந்த படத்தில் வில்லனாக நடித்த பஹத் பாசிலை கொண்டாடும் பதிவுகளையும் நான் பார்த்தேன். இந்த மனநிலை மாற வேண்டும். நமக்கு இதை விட பல பிரச்சினைகள் இருக்கிறது தமிழ்நாட்டில் வேலை இல்லாத பிரச்சனை அதிகமாக இருக்கிறது. விலைவாசி உயர்வு அது கொடி போரில் எண்ணிக்கைகள் உயர்வு என்று பல பிரச்சினைகள் இருக்கும் போது எப்படி புது புது பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது அதுபோக சினிமா எடுப்பவர்களுக்கும் ஒரு பொறுப்புகள் இருக்கிறது.

இப்படியே படங்களை எடுக்கணும் இதேபோன்று எண்ணங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. நான் நிறைய படங்களை பார்ப்பேன். இளையராஜா இசை என்றால் மிகவும் பிடிக்கும். எனக்கு கமல் மிகவும் பிடிக்கும் தற்போது உள்ள நடிகர்களில் மம்மூட்டி மகன் துல்கரை மிகவும் பிடிக்கும். ஆனால் இதைப் பற்றி எல்லாம் நான் பேசினால் சினிமாவைப் பற்றி எல்லாம் இவன் பேசுகிறான் என்றும் சொல்வார்கள். சில நேரங்களில் நான் மனதில் பட்டதை சொல்ல முடியவில்லை. நான் என்ன சொன்னாலும் அதில் ஏதாவது குற்றம் கண்டுபிடிப்பார்கள். அதனால் நான் அமைதியாக இருந்து விடுகிறேன் ‘ என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ஏற்கனவே மாமன்னன் திரைப்படம் வெளியான போது கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பத்திரிக்கையாளர் ஒருவர் மாமன்னன் படத்தை பார்த்தீர்களா ? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ் ‘நான் இன்னும் பார்க்கவில்லை’ என்று கூறியிருந்தார். ஆனாலும் இந்த கேள்வியை விடாத அந்த பத்திரிக்கையாளர் இந்த படத்தை பார்த்துவிட்டு பல அரசியல் கட்சிகளும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த படத்தை நீங்கள் ஏன் பார்க்கவில்லை அதற்கு என்ன காரணம் என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.

இதனால் கடுப்பான அன்புமணி ராமதாஸ் ‘எனக்கு நேரமில்லை’ என்று சொன்ன உடனே அந்த பத்திரிக்கையாளர் ஏற்கனவே பாமக கட்சிக்கு சாதி கட்சி என்று பெயர் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். இதனால் கடுப்பான அன்புமணி ராமதாஸ் ‘யார் அப்படி சொன்னது. எந்த மக்கள் அப்படி சொன்னார்கள், அது உங்கள் மனதில் இருக்கும் வன்மம். மக்கள் அப்படி நினைக்கவில்லை. உங்கள் மனதில் இருப்பதைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள்’ என்று அவேசமாக பதில் அளித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement