“இது தான் அங்க நடந்துச்சி” ரஹ்மான் நிகழ்ச்சியில் நடந்தது பற்றி மனம் திறந்த அவரின் சகோதரி.

0
2518
ARR
- Advertisement -

நேற்று நடைபெற்ற ரஹ்மானின் நிகழ்ச்சியில் நடைபெற்றது குறித்து அவரின் சகோதரி ஏ.ஆர் ரைஹானா கூறியுள்ளார். இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மானும் சமூக வலைத்தளங்களில் மன்னிக்கவும் கேட்டிருந்தார். தற்போது அந்த இசை கச்சேரி நேற்று நடைபெற்றது. டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் மக்கள் அவதிப்பட்டனர். பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், 10000 ரூபாய் டிக்கெட் வாங்கி தங்களால் உள்ளே கூட செல்லவில்லை என்று பலரும் புலம்பி இருக்கின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக ரசிகர்கள் பதிவில் கூறியிருப்பது, செப்டம்பர் 10ஆம் தேதி அதே இடத்தில் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகிருந்தது.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்:

இதனால் இந்த முறை திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடக்கும் என்று உற்சாகத்தில் இருந்தார்கள். ஆனால், கூட்டம் தான் ஆட்டு மந்தைகளைப் போல அதிகமாக இருந்தது. ஏழு மணி நிகழ்ச்சிக்கு 5 மணிக்கு சென்றவர்கள் கூட உள்ளே அனுமதிக்கப்படவில்லை இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் எல்லாம் விற்றுவிட்டது. இருந்தாலும், இன்னும் ஆன்லைனில் டிக்கெட்டுகள் புக் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

- Advertisement -

நிகழ்ச்சியில் நடந்தது:

இது ஏன் என்று புரியவில்லை? அது மட்டும் இல்லாமல் 2000, 5000 என வெளியூர்களிலிருந்து செலவு செய்து வந்தவர்களுக்கு கூட கார், பைக் பார்க்கிங் என்று திருவிழா காலங்களில் வசிப்பது போல கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இது ரொம்பவே வருத்தத்தை அளிக்கிறது.மேலும், விற்கப்பட்ட டிக்கெட்டுகளை எப்படி நிகழ்ச்சி ஏற்பாடாளர்கள் திருப்பியும் விற்றார்கள் என்று தான் பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

அவரின் சகோதரி கூறியது:

ரஹ்மான் எப்போதும் ரசிகர்கள் மீது அதிக அக்கறையும் அன்பும் கொண்டுவராக தான் இருப்பார். ஆகையால் தான் அவர் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற்ற இறந்த “மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சி மழையின் காரணமாக ஒத்தி வைத்தார் தனது ரசிகர்களுக்கு உடல்நிலை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலே அன்று நிகழ்ச்சி நடைபெறவில்லை. அப்படிப்பட்ட ஒரு மனிதர் தனது ரசிகர்கள் கூட்ட நெரிசல் சிக்கிக் கொள்வதையும் சங்கடத்திற்கு ஆளாவது விரும்புவாரா. எப்பொழுதும் வார இறுதிகளில் இசிஆர் சாலை சற்று நெரிசலாக தான் இருக்கும் பாண்டிச்சேரியில் இருந்து செல்பவர்களும் வருபவர்களும் வரவே அந்த சாலை கொஞ்சம் நெரிசலாக இருக்கும்.

-விளம்பரம்-

வார இறுதியில் கொண்டாட நினைத்து அங்கு வந்தவர்கள் கூட்டம் நிறைந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த வழியில் மெட்ரோ பணிகளும் நடைபெற்று வந்த காரணத்தால் நேற்று அவ்வளவு போக்குவரத்து சில அந்த பகுதியில் ஏற்பட்டது. இதற்கும் ரகுமானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் இதனை சரிசெய்திருக்க வேண்டும். ஏற்கனவே துபாயில் ரகுமானின் கான்செப்ட் நடத்திய போது நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது அப்போது ரசிகர்கள் மீண்டும் ரிஜிஸ்டர் செய்து பொது டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டனர்.

மறக்குமா நெஞ்சம் மகிழ்ச்சி ஆகஸ்ட் 12ம் தேதியிலிருந்து செப்டம்பர் 10ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. இதில் ரசிகர்கள் புது டிக்கெட்டை வாங்கினார்களா அல்லது பழைய டிக்கெட்டு பிரின்ட் போட்டு எடுத்துக் கொண்டார்களா என்று தெரியவில்லை அங்கு என்ன குளறுபடி நடந்தது என்று தெறியவில்லை. இருப்பினும் இப்படி ஒரு நிலைக்கு நிலை ஏற்பட்டதற்கு ரசிகர்களிடம் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.

Advertisement