-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

சீமான் கையாலேயே விருது வாங்கி ஆவுடையப்பன் இப்படி பேசினாரா? – உண்மையில் நடந்தது இது தான்

0
67

விருது வழங்கும் விழாவில் சீமானை தொகுப்பாளர் ஆவுடையப்பன் மரியாதை குறைவாக நடந்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமீபத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான கோல்டன் மொமெண்ட்ஸ் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சீரியல் நடிகர், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இதில் ஜீ தமிழ் பிரபலங்கள் பலருக்கு விருதுகளை கொடுத்து கௌரவித்து இருந்தார்கள். அந்தவகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆவுடையப்பனுக்கு சிறந்த தொகுப்பாளருக்கு காண விருது கொடுக்கப்பட்டிருந்தது. இந்த விருதை நாம் தமிழர் கட்சியின் தலைவரும், நடிகருமான சீமான் வழங்கியிருந்தார். பின் சீமான் கையில் விருதை வாங்கிய ஆவுடையப்பன், சத்துணவு வழங்குவதில் நிறைய குறை இருக்கலாம்.

நிகழ்ச்சியில் ஆவுடையப்பன் சொன்னது:

-விளம்பரம்-

குறைகள் சரிசெய்யப்பட வேண்டுமே தவிர அதற்காக அந்த திட்டத்தையே மோசம் என்று சொல்லக்கூடாது. அதன் மூலம் அனைவருடைய வயிறையும் பட்டினி போடா பார்க்காதீர்கள். சத்துணவு- காலை உணவு திட்டம் வேண்டாம் என்று யாராவது சொன்னால் அவர்கள் அயோக்கியர்கள் என்று பேசியதாக சோஷியல் மீடியாவில் சலசலப்பு கிடைத்திருக்கிறது. இது அடுத்து பலரும் ஆவுடையப்பன் மீது கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக விசாரித்ததில், விருது வழங்கும் விழாவில் ஆவுடையப்பன், நான் இதை சொல்லவில்லை.

உண்மையில் நடந்தது:

அண்ணன் சீமான் கையில் விருது வாங்கியது ரொம்ப சந்தோஷம். உங்கள் கையில் வாங்கியது கூடுதல் சிறப்பாக்கி விட்டது என்று சொல்லி தமிழா தமிழா நிகழ்ச்சிக்கு அவரை அழைத்திருந்தேன். இது மட்டும் தான் அந்த விருது விழாவில் நடந்தது என்று கூறி இருந்தார். ஆனால், இதற்கு முன்பு மே மாதம் தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடந்த எபிசோடில் ஆவுடையப்பன், சத்துணவு திட்டத்தை எதிர்ப்பவர்கள் அயோக்கியர்கள் என்று பேசியிருந்தார்.

-விளம்பரம்-

சீமான் திரைப்பயணம்:

அதை தான் தற்போது சோசியல் மீடியாவில் எடிட் செய்து வைரலாகி வருகிறார்கள். உண்மையில் மேடையில் சீமானை கிண்டல் செய்யும் வகையில் ஆவுடையப்பன் பேசவில்லை என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர், நடிகராக திகழ்பவர் சீமான். அதோடு இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பல ஆண்டு காலமாக இருக்கிறார்.

சீமான் நடித்த படம்:

ஒருங்கிணைப்பாளராக நலன் கருதி இவர் பல போராட்டங்களை நடத்தி இருக்கிறார். இப்படி இவர் அரசியலில் பிஸியாக இருந்தாலும் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சீமான் நடிப்பில் வெளியாகி இருந்த படம் முந்திரிக்காடு. இந்த படத்தில் சீமான் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news