தயவு செஞ்சி உதவுங்க, நான் சரியானதும் திருப்பி உதவி செய்றேன் – புற்றுநோயால் பாதிப்பட்ட அங்காடி தெரு பட நடிகையின் உருக்கமான வீடியோ.

0
2734
sindhu

வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான ‘அங்காடித் தெரு’ படத்தில் வந்த நடிகை படுத்த படுக்கையாக தனது சிகிச்சைக்கு உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அங்காடித்தெரு. இந்த படத்தில் மகேஷ், அஞ்சலி, இயக்குனர் வெங்கடேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படம் பல்வேறு விருதுகளை கூட குவித்து இருந்தது.

புற்று நோயால் அவதிப்படும் அங்காடித்தெரு நடிகை || Cancer affected by angadi  theru sindhu

இந்த படத்தில் வந்த சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிகர் நடிகைகள் கூட ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். அந்த வகையில் இந்த படத்தில் இந்தப் படத்தில் விலைமாதுவாக இருந்து அதன்பின்னர் நடைபாதை வியாபாரியான குள்ள மனிதரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அந்த குள்ள வியாபாரியை போலவே குழந்தையை பெற்றெடுத்து விட்டு அதற்கான தத்துவத்தை சொல்லும் அந்த சின்னம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சிந்து.

- Advertisement -

நடிகை சிந்து நாடோடிகள் தெனாவட்டு, நான் மகான் அல்ல, சபரி கருப்பசாமி குத்தகைதாரர், போக்கிரி போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ அங்காடித்தெரு திரைப்படம் தான். இப்படி ஒரு நிலையில் நடிகை சிந்து புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறாராம். இப்படி ஒரு செய்தியை கேட்டு அங்காடித்தெருவில் சிந்து உடன் நடித்த பிரபல நடிகரான பிளாக் பாண்டி சிந்துவை நேரில் சந்தித்து வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் பேசியுள்ள நடிகை சிந்து கடந்த சில காலமாகவே தனக்கு புற்றுநோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும் தனக்கு ஏற்கனவே நடிகர் கார்த்தி, ரோபோ ஷங்கர், போஸ் வெங்கட், நடிகர் சாய் தீனா போன்றவர்கள் சிறு சிறு உதவிகளை செய்துள்ளதாகவும் தனக்கு முடிந்த உதவிகளை யாராவது செய்யுங்கள் என்றும் தனக்கு உதவி செய்பவர்களுக்கு கண்டிப்பாக நான் குணமடைந்து மீண்டும் உதவி செய்வேன் என்றும் கூறியிருக்கிறார் சிந்து.

-விளம்பரம்-

Advertisement