நீட் பிரச்னைக்காக உயிர் துறந்த மாணவி அனிதாவின் வாழ்க்கை வரலாற்றில் பிக் பாஸ் ஜூலி நடிக்கப்போவதாக தகவல் வந்தது. மேலும், அனிதாவின் பிறந்த நாளன்று ‘அனிதா எம்.பி.பி.எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.இந்த படத்தை இயக்குநர் அஜய் இயக்கி ராஜகணபதி என்பவர் தயாரிக்க இருந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ’மகளின் தியாகம், போராட்டத்தை முன்வைத்து இயக்குநர் அஜய்குமார் பணம் சம்பாதிக்க திட்டமிடுவதாகவும் தமக்கு ரூ25 லட்சம் மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அனிதாவின் தந்தை சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.
அதே போல இந்த படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் அனிதாவின் குடும்பத்தினரை மரியாதையை குறைவாக பேசினார்கள் என்று சில செய்திகளும் வெளியாகியது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ள தயாரிப்பாளர் ராஜகணபதி குறியாதவது, அனிதா உயிரழிந்த பின்னர் சிறிது காலம் கழித்து யாரும் அவருக்காக பெரிதாக குரல் கொடுக்கவில்லை.
இயக்குநர் அஜய் :
எனவே, நானும் அஜய் என்பவரும் அனிதாவை பற்றி படம் எடுக்கலாம் என்று திட்டமிட்டோம். நான் அனிதாவின் குடும்பத்தை அழுத்தமாக இந்த படத்தில் காண்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், இயக்குனரோ இது ஒரு சமுதாய அக்கறை கொண்ட படம் அதனால் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று கூறினார். அப்போது இருந்து தான் பிரச்சனை துவங்கியது.
நான் அணிதவின் தம்பி மணிரத்னத்திடம் பேசினேன் ஆனால், அவர் இந்த படத்தை எடுக்க சம்மதிக்கவில்லை. எனவே, இயக்குனரிடம் நாங்கள் ஒன்றாக கலந்தாலோசிக்கும் போது அவர் தான் அனிதாவின் குடும்பத்தை ஒருமையில் பேசினார். இதனால் நான் இயக்குனரிடம் இருந்து விலக முடிவெடுத்தேன். ஆனால், என்னை அழைக்காமலேயே இயக்குனர் இந்த படத்தின் பூஜைகளை துவங்கிவிட்டார். நான் விரைவில் ஒரு நல்ல இயக்குனர், இசையமைப்பாளர், சிறந்த கலைஞ்சர்களை தேர்ந்தெடுத்து இந்த படத்தை எடுப்பேன். அது பல விருதுகளை வாங்கும் அளவிற்கு சிறந்த படமாக இருக்கும் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் ராஜகணபதி