பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா, தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “கயல்” படத்தில் நடித்த நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயகியிருந்தார்.
தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது தொகுப்பாளினி பணிக்கு திரும்பியுள்ளார். ஆனால், இம்முறை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிரங்கியுள்ளார் அஞ்சனா. இந்த நிலையில் இன்சக்ராமில் ரசிகர் ஒருவர் சன் மியூசிக்கை விட்டு ஏன் ஜீ தமிழுக்கு சென்றீர்கள் என்று கேள்வி கேட்டிருந்தார்.
இதையும் படியுங்க : பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் லட்சுமி மேனன்.! இப்போ என்ன பண்றாங்க தெரியுமா.!
அதற்கு பதிலளித்துள்ள அஞ்சனா, பத்து வருடங்களாக சன் ம்யூசிக்கில் இருந்து விட்டேன் நான் பிரேக் எடுத்த பின்னர் பலர் என்னை மீண்டும் வரச் சொல்லி அணுகினார்கள்.எனவே, தொகுப்பாளினியாக மீண்டும் பணியாற்ற விரும்பினேன். மேலும், நான் வேலை செய்யும் இடத்தையும் ஒரு மாற்றத்திற்காக மாற்றிக் கொள்ளலாம் என்று விரும்பினேன். மாற்றம் முக்கியமாச்சே.
நான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சேர்ந்ததுமே நான் போட்ட முதல் கண்டிஷன் என் குழந்தையுடன் நான் எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதான். ஷூட்டிங்கின்போது கூட தனது குழந்தையுடன் நான் இருக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர்களும் சம்மதித்தார்கள் அதனால் எனக்கு வேறு என்றும் தேவைப்படவில்லை என்று கூறியுள்ளார் அஞ்சனா.