12-வது பாட புத்தகத்தில் சனாதனத்திற்கு ஆதரவாக இருக்கும் விஷயத்தை குறிப்பிட்டு உதயநிதியை சீண்டிய அண்ணாமலை.

0
1300
- Advertisement -

சமீப காலமாகவே உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு ஆனது மிகவும் சர்ச்சையான நிலையில் பன்னிரெண்டாம் பாடப்புத்தகத்தில் சனாதனம் குறித்து இருந்த  `சனாதன தருமம்` என்றால் `அழிவில்லாத நிலையான அறம்` எனப்படும்,” என்று பாடம் இடம்பெற்று இருக்கிறது. இது தற்போது சமூக உடகங்களில் பரவி வந்த நிலையில்  இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினை சீண்டி அவரது x தளத்தில் பதிவு ஒன்றை செய்து இருந்தார்.

-விளம்பரம்-

உதயநிதி பேசியது:  

சிலவற்றை நாம் எதிர்க்க கூடாது கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா அதை எல்லாம் ஒழிக்க தான் வேண்டும் அது போல தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் என்றால் என்ன அதன் பெயரே சமஸ்கிருததில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனத்திற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையானது மாற்றமுடியாதது, யாரும் கேள்வி கேட்க்க முடியாது என்று அர்த்தம்.

- Advertisement -

எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்க்க வேண்டும் என்பது தான் இந்த கமினியூஸ்ட் இயக்கமும் இந்த திமுக இயக்கமும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கேலி செய்யும் வகையில் ஒரு செய்தி தாளில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அதற்க்கு நம்முடைய முதல்வர் சமூக வலைதளங்களில் அதற்க்கு எதிர்ப்பாக பதிவு செய்து இருந்தார். தமிழகத்தில் மற்றகூடதாது எதுவும் இல்லை என்று மாற்றி காட்டியவர் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி. பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது கணவனை இழந்த பெண்களுக்கு உடன் கட்டை ஏற வைத்தது.

திராவிட அரசு மக்களை முன்னோக்கி அழைத்து செல்கிறது ஆனால் ஒன்றிய அரசு மக்களை பின்னோக்கி அழைத்து செல்கிறது. நாம் நம்முடைய பிள்ளைகளை படிக்க வைக்க திட்டங்களை கொண்டு வருகிறோம் ஆனால் பாசிஸ்ட்கள் நம்முடைய பிள்ளைகளை படிக்க வைக்க கூடாது என்று செயல் பட்டு வருகின்றனர். நாம் அனைவரும் படிக்க கூடாது என்பது தான் அவர்களுடைய எண்ணம். அதற்க்கு தான் நீட் போன்ற தேர்வுகளை 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்து அன்று முதல் இன்று வரை அரியலூர் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதிசன் வரை 21 மாணவர்களை நாம் பலி கொடுத்து இருக்கிறோம் என்று அவர் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

அண்ணாமலையின் கருத்து:

திரு உதயநிதி ஸ்டாலின் & திரு சேகர் பாபு சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனங்களைப் பெற்ற பிறகு இந்து மதமும் சனாதன தர்மமும் வேறு என்று கூறினர். சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றே என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு பாடப்புத்தகம் கூறுகிறது. சனாதன தர்மமே நித்திய தர்மம் என்றும் குறிப்பிடுகிறது. பி.கே.சேகர் பாபு & உதயநிதி ஸ்டாலினை அறிவொளி பெற இந்த வகுப்பில் சேருமாறு அறிவுறுத்துகிறோம் என்று அவர் பதிவு செய்து இருந்தார்.

Advertisement