‘கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்’ – ராஜ்கிரணின் எச்சரிக்கை சீமானுக்கு தானா ?

0
1988
Seeman
- Advertisement -

சமீபத்தில் இஸ்லாமியர்களின் பொறுமையை சோதிப்பவர்கள் குறித்து எச்சரிக்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் நடிகர் ராஜ்கிரண் போட்ட பதிவு வைரலான நிலையில் ராஜ்கிரணின் இந்த பதிவு சீமானின் சமீபத்திய பேச்சை குறிப்பது போலவே இருக்கிறது என்று நெட்டிசன்கள் பலர் கூறி வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் “நல்லி எலும்பு” என்று சொன்னால் அனைவருக்கும் நியாபகத்தில் வருவது நடிகர் ராஜ்கிரண். இவர் இயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜ்கிரண் மகள் நடிகர் முனிஷ்ராஜாவை பெற்றோர்கள் சம்மதத்தை மீறி திருமணம் செய்துகொண்டார். இதனால் கடுப்பான ராஜ்கிரண் இனி ஜீனத் என் மகளே இல்லை என்று அறிவித்து இருந்தார். தற்போது ராஜ்கிரண் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இஸ்லாமியர்கள் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் ராஜ்கிரண்.

- Advertisement -

இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும் அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, தியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல… “இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.

இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்”,பொறுமை காக்க வேண்டும் என்று,இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்… இந்தப்பொறுமையை, தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

ராஜ்கிரணின் இந்த பதிவு சீமானை குறிப்பிட்டு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பலரும் கூறி வருகின்றனர். அதற்கு முக்கியகாரணமாக பார்க்கப்படுவது. சமீபத்தில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சீமான் ‘ ஏதோ ஒரு ஓரத்தில் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரில் இருக்கும் கிறிஸ்தவர்களும் ஓட்டுப்போடப் போறதில்லை.

இங்கே இருக்க கிறிஸ்தவர்களும் ஓட்டுப்போடப் போறதில்லை. நாம நினைச்சுக்கிட்டிருக்கோம், இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் தேவனின் குழந்தைகள்னு. ஆனா, அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல வருடங்களாகிவிட்டது.இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் பெரிய பொறுப்பேற்க வேண்டியவர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள்தான்.

தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் 18% வாக்குகளை தி.மு.க.வுக்குப் போட்டு, காங்கிரசுக்குப் போட்டு நாட்டை தெருவில் போட்டது இவர்கள்தான். சகிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீரழிவான நிர்வாகம் ஆகியவற்றுக்குக் காரணம் இவர்கள்தான். இவர்களிடம் போய் என்ன பாவத்தை ஒப்புக்கொடுப்பது. பாவத்தையே பெரும்பான்மையாக அவர்கள்தானே செய்கிறார்கள்’ என்று பேசி இருந்தார். எனவே, சீமானின் இந்த பேச்சை கண்டித்தே ராஜ்கிரண் இப்படி ஒரு பதிவை போட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement