குழந்தை, நடிப்புக்காகத்தான் – மகள் பிறந்த பின் அனுஷ்கா ஷர்மாவின் திடீர் முடிவு.

0
258
anushka
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஜோடி நீண்ட நாட்கள் காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பின்னர் இவர்கள் இருவரும் கடந்த 2017-ஆம் ஆண்டு இத்தாலியில் நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னும் அனுஷ்கா சர்மா படங்களில் கவனம் செலுத்தி வந்தார். பின் இவர் கர்ப்பம் ஆனதால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். கடந்த ஆண்டு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்து உள்ளது. தங்களது குழந்தைக்கு வாமிகா என்று பெயர் வைத்தனர். பொதுவாக பிரபலங்கள் தங்கள் குழந்தை பிறந்து முதல் நாள் முதலே புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்து விடுவார்கள்.

-விளம்பரம்-

ஆனால், குழந்தை பிறந்து ஒரு வருடங்கள் ஆகப் போகும் நிலையிலும் தங்களது குழந்தையின் முகத்தை எந்த ஒரு சமூக வலைதளப் பக்கத்திலோ அல்லது புகைப்படமாகவோ வெளியிடவில்லை அனுஷ்கா. வலைதளப் பக்கத்தில் தங்களது மகளின் முகத்தை இதுவரை வெளியுலகத்திற்கு காட்டாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி கூறி இருப்பது, வாமிகாவின் புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ இதுவரை வெளியிடாமல் இருக்கும் ஊடகங்களுக்கு நன்றி. ஒரு பெற்றோராக நாங்கள் எங்களது மகளின் புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட வேண்டாம் என்று புகைப்படத்தையும், ஊடகத்துறையிடம் கேட்டுக் கொண்டிருந்தோம்.

- Advertisement -

தன் குழந்தை பற்றி அனுஷ்கா சொன்னது:

அதன்படி இதுவரை எந்த ஒரு புகைப்படத்தையும் எடுக்காமல் இருப்பதற்கு நன்றி. எங்களது குழந்தை சமூக வளைதளம் மூலமாகவோ அல்லது மீடியா மூலமாகவோ அறியப்பட்டு வளரக் கூடாது என்பதற்காகவும், எங்களது குழந்தையின் வாழ்க்கை மிகவும் ஃப்ரீயாகவும், இலகுவாக அமைய வேண்டும் என்பதனாலேயே நாங்கள் இதனை தவிர்த்து வருகிறோம் என்று கூறி இருந்தார். அனால், இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையிலான போட்டியின் போது கோலி மகளின் முகம் மைதானத்தில் கேமராவில் காட்டப்பட்டது. இதனால் புகைப்படத்தை வைரலாக்க வேண்டாம் என்று அனுஷ்கா கேட்டு இருந்தார்.

அனுஷ்கா ஷர்மாவின் இன்ஸ்டா பதிவு:

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் குழந்தை பிறந்ததில் இருந்தே அனுஷ்கா சர்மா நடிப்பிற்கு ஓய்வு கொடுத்து இருந்தார். தற்போது அனுஷ்கா சர்மா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார் என்றும் இதற்காக இவர் தான் சார்ந்திருக்கும் திரைப்பட தயாரிப்பு கம்பெனியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக அனுஷ்கா சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நானும் எனது சகோதரர் கர்னேஷ் ஷர்மாவும் இணைந்து கிளீன் ஸ்டேட் பிலிம்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தோம்.

அனுஷ்கா சர்மா தொடங்கிய தயாரிப்பு கம்பெனி:

நாங்கள் திரைப்பட தயாரிப்புக்கு புதியவர்களாக இருந்தோம். ஆனால், எங்களிடம் ஒரு வேகம் இருந்தது. இன்று எங்களின் இதுவரையிலான பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது நாம் எதை உருவாக்கி இருக்கிறோம் என்பதையும் நாங்கள் எதிர்கொண்ட இடையூறுகளையும் நினைத்து பெருமைப்படுகிறேன். நடிப்பை தொழிலாக கொண்ட நான் இப்போது தாயாக மாறி இருப்பதால் முன்னெப்போதும் இல்லாத வகையில் எனது வாழ்க்கையை முற்றிலும் புதிய முறையில் சமநிலைபடுத்த வேண்டி இருக்கிறது. எனவே எனக்கு இருக்கும் நேரத்தில் எனது தொழிலான நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். எனவே படத்தயாரிப்பு கம்பெனியில் இருந்து விலகுவது என்று முடிவு செய்துள்ளேன்.

தயாரிப்பு கம்பெனியில் இருந்து விலகிய அனுஷ்கா சர்மா:

நானும் எனது சகோதரனும் சேர்ந்து தொடங்கிய சினிமா தயாரிப்பு கம்பெனியை எனது சகோதரர் முன்னெடுத்துச் சென்று முதலிடத்திற்கு கொண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் தொடர்ந்து அவருக்கு உற்சாகப்படுத்துபவராக இருப்பேன் என்று தெரிவித்திருந்தார். அனுஷ்கா தன் சகோதரனுடன் சேர்ந்து தொடங்கிய கம்பெனி மூலம் படம் தயாரித்தல், வினியோகித்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனுஷ்காவின் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் அனுஷ்கா நடிக்கப்போகும் படம் பற்றிய தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement