அடடடே, ஹீரோவானார் புகழ் – குக்கு வித் கோமாளியில் வெளியிடப்பட்ட போஸ்டர், தூக்கி கொண்டாடிய கோமாளிகள்.

0
564
pugazh
- Advertisement -

ஹீரோவாக களமிறங்கி இருக்கும் புகழ் நடிக்கும் படம் பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். இவர் கடலூரை சேர்ந்தவர். இவர் வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக் கொண்டு சென்னைக்கு வேலை தேடி வந்தார். முதலில் மெக்கானிக் கடையில் வேலை செய்த இவர் தொடர்ந்து பல கடையில் வேலை செய்து இருக்கிறார். பிறகு 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-
pugal

மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு உள்ளார்கள். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. அந்த வகையில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். கடந்த இரண்டு சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது.

- Advertisement -

புகழின் திரைப்பயணம்:

இவர் சபாபதி என்ற படத்தின் மூலம் தான் வெள்ளித்திரையில் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் புகழ் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் ஹரிஹரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா என்று பலர் நடித்துள்ளார்கள். மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து புகழ் சமீபத்தில் அஜித்தின் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்திலும் ஒரு காட்சியில் நடித்து இருப்பார்.

புகழ் நடித்த படங்கள்:

இது மட்டுமில்லாமல் அருண் விஜயின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் புகழ் சிறு கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் தான் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த முறை போட்டியாளர்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் புகழ் வராதது ரசிகர்கள் பலருக்கும் வருத்தத்தை கொடுத்து இருந்தது.

-விளம்பரம்-

ஹீரோவாக களமிறங்கும் புகழ்:

பின் இரண்டாம் வாரத்திலிருந்து நிகழ்ச்சிக்கு புகழ் வந்ததையடுத்து நிகழ்ச்சியின் டிஆர்பியே எகிறியது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய காமெடியும், ஆக்ட்டிங்கும் மக்கள் மத்தியில் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் தற்போது புகழ் ஹீரோவாக களம் இறங்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. தற்போது ஒரு படத்தில் புகழ் ஹீரோவாக கமிட் ஆகி இருக்கிறார். அந்த படத்தின் போஸ்டரை குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் வெளியிட்டு இருக்கிறார். மேலும், அந்த படத்திற்கு Mr Zoo Keeper என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

புகழ் நடிக்கும் படம் பற்றிய தகவல்:

இந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் 20ஆம் தேதி ஊட்டியில் தொடங்கி இருக்கிறது. அதனை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ஏன்னா, இந்த படத்தில் நிஜமான புலியுடன் சூட்டிங் நடக்கும் என்பதால் இந்தியாவில் அதற்கு அனுமதி இல்லை என்பதால் தான் பிலிப்பைன்ஸில் சூட்டிங் நடப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறார்கள். மேலும், இந்த படம் பற்றி புகழ் நிகழ்ச்சியில் பேசியிருப்பது, என்னை மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு முக்கிய காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். நான் இந்த நிகழ்ச்சிக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். மக்களுக்கும் ரொம்ப நன்றி என்று பேசியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் எல்லோருமே வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement