‘தெலுங்கு திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை’ – அனுஷ்கா ஷெட்டியின் திடுக் தகவல்

0
281
Anushka
- Advertisement -

அனைத்து மொழி திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருக்கிறது என்று நடிகை அனுஷ்கா அறிவித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே கோலிவுட் திரையுலகில் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழி திரையிலும் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு இருக்கிறது. புகழ் பெற்ற நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை என பலரும் இது குறித்து புகார் அளித்திருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி திரையுலகில் நடிகைக்கு பாலியல் தொந்தரவு இருக்கிறது என்று கூறி இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இரண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தான் அனுஷ்கா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார். அதிலும் அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த அருந்ததீ, பாகுபலி போன்ற படங்கள் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

- Advertisement -

அனுஷ்காவின் திரைப்பயணம்:

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அதிலும் பாகுபலி படத்தின் மூலம் இவர் இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகையாக மாறினார். ஆனால், பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை அனுஷ்கா தவிர்த்து வந்தார். பின் கடைசியாக அனுஷ்கா அவர்கள் நடிகர் மாதவன் உடன் இணைந்து நிசப்தம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி இருந்தது. இதனையடுத்து அனுஷ்காவின் படங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

அனுஷ்கா நடிக்கும் படம்:

இதனால் ரசிகர்கள் முதலும், கடைசியும் மாதவன் படத்தில் தானா? திருமணம் ஆக இருப்பதனால் நடிக்க வில்லையா? என்று பல விதமாக கமெண்டு போட்டு இருந்தார்கள். பிறகு அனுஷ்கா அவர்கள் கதாநாயகியாக மீண்டும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை அனுஷ்கா அவர்கள் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனுஷ்கா நடிக்கும் இந்த புதிய படத்தை யூவி கிரியேஷன் தயாரிக்கிறது. இது அனுஷ்காவின் 48வது திரைப்படமாகும்.

-விளம்பரம்-

நடிகைகள் குறித்து அனுஷ்கா அளித்த பேட்டி:

மேலும், அனுஷ்காவின் புது படம் குறித்து ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதை குறித்து அனுஷ்கா அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அவர் கூறியது, தெலுங்கு திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், நான் அதை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

சினிமா உலகில் நடிகைகள் படும் வேதனை:

என்னிடம் யாரும் அந்த மாதிரி எண்ணத்துடன் பழகவில்லை. நான் எப்போதும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருப்பதால் எனக்கு இந்த அனுபவம் இல்லை. இருந்தாலும் பிற நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் திரையுலகில் இருப்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதுமட்டுமில்லாமல் ஒரு நடிகை குறுக்கு வழியில் சென்று புகழ் பெற வேண்டுமா? அல்லது கடின உழைப்பின் மூலம் புகழ் பெற வேண்டுமா? என்பதை அவரே முடிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறது. இப்படி அனுஷ்கா அளித்து இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement