தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை அனுஷ்கா. அனுஷ்கா அவர்கள் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனா உடன் நடித்த ‘சூப்பர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இரண்டு படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால் இவர் டோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தினார்.
பின் தெலுங்கில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார் என்று சொல்லலாம். அதன் பின்னர் தமிழில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். அருந்ததி, பாகுபலி போன்ற படங்களின் மூலம் அனுஷ்கா மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இன்று வரை அனுஷ்கா ரசிகர்களின் ‘தேவசேனா’ வாக திகழ்ந்து வருகிறார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது அனுஷ்கா அவர்கள் நடித்த படங்கள் ஹிந்தியிலும் மொழி மாற்றம் செய்து வரப்படுகிறது. இவர் சினிமாவில் நடிப்பதை தாண்டி யோகா பயிற்சி ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் நடிகை அனுஷ்கா அவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் பல சுவாரசியமான கேள்விகள் கேட்கப்பட்டது. கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் மிக கூலாகவும், ஜாலியாகவும் அனுஷ்கா பதில் சொன்னார்.
அதோடு நடிகர் பிரபாஸ் குறித்த கேள்விக்கு கூட அனுஷ்கா அவர்கள் ஜாலியாக பல கருத்துக்களை கூறி எல்லோரையும் சந்தோசப்படுத்தினார். ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை நிகழ்ச்சியின் நடுவர் ஒருவரை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுது உள்ளார் அனுஷ்கா. மேலும், நடிகை அனுஷ்கா எதற்காக அழுந்தார் என்றும் புரியவில்லை.
அவர் அழுவதை பார்த்தால் ஏதோ பெரிய சம்பவம் நிகழ்ந்தது போல் உள்ளது. அந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ மட்டும் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சி வந்தால் மட்டும் தான் நடிகை அனுஷ்கா எதற்காக அழுந்தார் என்பதற்கான காரணம் தெரியும். அவர் ஏன் அழுந்தார்? என்ன காரணம்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது கோனா வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தமாகி இருக்கிறார். அதோடு தமிழில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக சைலன்ட் என்ற படத்திலும், நிசப்தம் படத்திலும் அனுஷ்கா நடித்து வருகிறார்