‘இருக்கற இடம் தெரியாம இருந்துட்டு போய்யிடனும்’ அப்பா படத்தில் வந்த குட்டி பையன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

0
6150
appa

இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படம் அப்பா. இந்த படத்தை சமுத்திரக்கனி அவர்களே எழுதி இயக்கி தயாரித்து இருந்தார். இந்த படம் 2012 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற சாட்டை படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரைத் தொடர்ந்து இந்த படத்தில் தம்பி ராமையா, நமோ நாராயணா, வினோதினி விக்னேஷ் யுவா லட்சுமி போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள்.

மேலும், இந்த படத்திற்கு இளையராஜா அவர்கள் இசை அமைத்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. அதோடு இந்த காலகட்டத்திற்கு தந்தையின் முக்கியத்துவம், கடமை என்ன என்பதை இந்த படம் தெளிவாக சொல்லி இருந்தது. இந்த படத்தில் அதிகம் சிறு வயதுப் பிள்ளைகள் நடித்து மக்கள் மத்தியில் பரவலாக அறியப் பட்டார்கள்.

இதையும் பாருங்க : என்னடா லிப் லாக்லாம் அடிக்கிறீங்க – இது பிக் பாஸா இல்ல வேற எதனாவா. வைரலாகும் வீடியோ.

- Advertisement -

அந்த வகையில் மக்கள் மத்தியில் பரவலாக அறியப் பட்டவர்களில் ஒருவர் தான் நாசத். இவர் இந்த படத்தில் மயில்வாகனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டது. எத்தனை தொடர்ந்து இவர் தொண்டன், கொளஞ்சி, பிழை போன்ற ஒரு சில படங்களில் நடித்து உள்ளார்.

இந்நிலையில் தற்போது இவரின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்து பலரும் வியந்து போய் அப்பா படத்தில் வந்த பையனா! இப்போ எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல நடிகர்கள் தற்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கேப்ரில்லா அவர்கள் பிக்பாஸ் போட்டியிலும், பிபி ஜோடிகளும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதேபோல் யுவ லட்சுமியும் தற்போது நடிகையாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது நாசத் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement