என்னது 3 பேரா ? படத்துல 2 பேர் தானா இருந்தாங்க – குழப்பிவிட்ட டாக்டர் பட ட்வின்ஸ் நடிகர்கள்.

0
2102
doctor

விஜய்யின் மாஸ்டர் படத்திற்குப் பின் திரையரங்குகளில் வசூல் வேட்டையை செய்துகொண்டிருக்கின்றது டாக்டர் படம். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் டாக்டர். இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அதுமட்டும் இல்லாமல் படம் வசூலில் கோடிகளில் குவித்து வருகிறது. பெண் குழந்தைகளை கடத்தும் கும்பல் இருந்து குழந்தைகளை சிவகார்த்திகேயன் எப்படி மீட்கிறார் என்பது தான் படத்தின் மையக்கதை. இந்த படத்தில் வில்லன் அணியில் ட்வின்ஸ் கதாபாத்திரத்தில் ட்வின்ஸ் பிரதரஸ் நடித்துள்ளார்கள்.

இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ட்வின்ஸ் பிரதரஸ் தான். இவர்கள் ராஜீவ் லக்ஷ்மன், ரகுராம் ஆவார். இவர்கள் இருவரும் டாக்டர் படம் குறித்து பேட்டி ஒன்று கூட அளித்திருந்தார்கள். அதில் அவர்கள் கூறியது, டாக்டர் படத்தில் நடித்தது மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. இந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் நிஜமாகவே நாங்கள் சிவகார்த்திகேயனை அடித்து விட்டோம். ஆனால், அவர் தப்பாக நினைத்து கொள்ளவில்லை. உண்மையாலுமே சிவகார்த்திகேயன் ஒரு நல்ல மனிதர். கமலஹாசன், ரஜினிகாந்த் எங்கள் இருவருக்கும் மிகவும் பிடிக்கும். நாங்கள் இருவருமே மிகப்பெரிய ரசிகர்கள். அதேபோல் விஜய் உடைய நடனம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

இதையும் பாருங்க : ‘இருக்கற இடம் தெரியாம இருந்துட்டு போய்யிடனும்’ அப்பா படத்தில் வந்த குட்டி பையன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

- Advertisement -

அதேபோல் நிஜமாகவே நாங்கள் குழந்தையை கடத்தி சாப்பிட போறோம் என்று வேடிக்கையாகவும் பல விஷயங்களை பேசி இருந்தார்கள். இவர்கள் இருவரும் முதன் முதலாக சினிமா உலகிற்கு இந்தி படத்தின் மூலம்தான் நுழைந்தார்கள். அதனைத் தொடர்ந்து பஞ்சாபி, தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது முதல் முறையாக தமிழில் டாக்டர் படத்தில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இவர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை தற்போது பதிவிட்டுள்ளார்கள்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ந்து போய் உள்ளார்கள்.அப்படி என்ன அந்த புகைப்படத்தில் உள்ளது என்றால், அந்த புகைப்படத்தில் மொத்தம் 3 பேர் உள்ளார்கள். இதை பார்த்தால் இவர்கள் ட்வின்ஸ்? மூவரா? என்று கேட்டுள்ளனர். உண்மையாலுமே இவர்கள்ட்வின்ஸ் தான். புகைப்படத்தில் நடுவில் இருப்பவர் இந்தப்படத்தின் மெட்ரோ காட்சியில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் போது இவர்களுக்கு டூப் போட்டவர். அப்போது எடுக்கப்பட்ட போட்டோவை தான் இவர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement