மறைந்த தன் அம்மாவின் முன்னிலையில் மகளுக்கு படு சிம்பிளாக திருமணத்தை முடித்த Ar – அவரே பகிர்ந்த புகைப்படம் இதோ.

0
447
rahman
- Advertisement -

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் மகளுக்கு மிகவும் சிம்பிளாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. தற்போது ஏ ஆர் ரஹ்மானின் வருங்கால மருமகன் குறித்த தகவல் நமக்கு கிடைக்கப்பெற்று இருக்கிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார். பின் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து உள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-14-635x1024.jpg

மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை குவித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர். ஏ ஆர் ரஹ்மான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அமீன் என்ற மகனும், கதீஜா ரகுமான், ரெஹிமா ரகுமான் என்ற இரு மகள்களும் உள்ளனர். இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் கதீஜாவிற்கு  கடந்த 22ம் தேதி எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

- Advertisement -

ஏ ஆர் ரஹ்மானின் மருமகன் :

பொதுவாக ஏ ஆர் ரஹ்மான் மிகவும் எளிமையான நபர். இதனால் தனது மகளின் நித்தியதார்தத்தை கூட மிகவும் எளிமையாகவே நடத்தி இருந்தார். இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். கதீஜாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் மணமகன் பெயர் ரியாஸ் என்ற தகவல் மட்டுமே வெளியானது. இதுகுறித்து கதீஜா பதிவிட்ட போது ‘கடவுளின் ஆசீர்வாதத்தோடு இந்த சந்தோஷமான செய்தியை உங்கள் அனைவருக்கும் அறிவிக்கிறேன். எனக்கு ரியாஸ்தீன் ஷெய்க் மொஹமுத் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து இருக்கிறது.

அம்மா முன் நடந்த திருமணம் :

என்னுடைய நிச்சயதார்த்தம் என்னுடைய பிறந்த நாளான டிசம்பர் 29 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன் நடைபெற்றது’ என்று குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கதீஜாவின் திருமணம் மிகவும் சிம்பிளாக நடைபெற்று இருக்கிறது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணத்தில் மறைந்த தன் அம்மாவின் புகைப்படத்திற்கு முன் நிக்க செய்து வைத்துள்ளார் ரகுமான்.

-விளம்பரம்-

சவுண்ட் இன்ஜினியர் ரியாஸ் :

கதீஜாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் மணமகன் ரியாஸ் ஒரு சவுண்ட் இன்ஜினியர். இவர் பல்வேறு ஸ்டூடியோகளிலன் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அவ்வளவு ஏன் இவர் ஏ ஆர் ரஹ்மானின் படத்திலும் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், இவர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த ‘தாமாஷா’ என்ற பாலிவுட் படத்தில் பணியாற்றி இருக்கிறார்.

This image has an empty alt attribute; its file name is 1-12-725x1024.jpg

ஏ ஆர் படத்தில் பணியாற்றியுள்ள ரியாஸ் :

ரன்பீர் கபூர், தீபிகா படுகோன் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரியாஸ் பணியாற்றி இருக்கிறார். அதுபோக இவரது பெயரை படத்தின் டைட்டில் கார்டிலும் ஏ ஆர் ரஹ்மான் சவுண்ட் இன்ஜினியர்கள் பெயரில் குறிப்பிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன் படத்தில் பணியாற்றியவருக்கு தன் மகளை கட்டிகொடுத்து இருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.

Advertisement