எம்.பி அறிவிப்புக்குப் பின் இளையராஜா பற்றிய ஏ.ஆர்.ரஹ்மானின் போட்ட முதல் பதிவு.

0
655
ArRahman
- Advertisement -

இளையராஜாவின் எம் பி அறிவிப்புக்கு பின் ஏ ஆர் ரகுமான் பதிவிட்டிற்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார். இவரின் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் எல்லோரையும் கட்டிபோட்டவர். 1976 ஆம் ஆண்டு இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். இவர் இசையமைப்பாளர், பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இவர் பாடல் வரிகளை எழுதுபவர் என்று பலருக்கும் தெரியாத ஒன்று.

- Advertisement -

இதையும் பாருங்க : ஏற்கனவே விவாகரத்து ஆன பெண்ணுடன் துப்பாக்கி, அஞ்சான் பட நடிகருக்கு திருமணம் – பொண்ணு யார் தெரியுமா ?

இளையராஜா வாங்கிய விருது:

மேலும், இவர் கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர். இதனால் இவருக்கு இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய அரசின் பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் இவருக்கு பத்ம விபூஷண், தேசிய விருது என பல விருதுகளை பெற்று இருக்கிறார். தற்போது இவர் படங்களில் பிசியாக இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அம்பேத்கரை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இளையராஜாவுக்கு Mp சீட் :

இது குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்கள் செய்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இளையராஜாவுக்கு Mp சீட் கிடைத்து இருக்கிறது. நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் மொத்தம் 12 பேர் நியமன எம்.பி.க்கள். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ராஜ்யசபா நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் தற்போது இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி டீவ்ட்:

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சாதாரண பின்னணியில் இருந்து வந்த இளையராஜா மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார். மனித உணர்வுகளை இசையின் வாயிலாக அழகுற பிரதிபலித்தவர் இளையராஜா. அவரை நாடாளுமன்ற எம்.பி.யாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டு இருந்தார். மேலும் வீரேந்திர ஹெக்டே, விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் ராஜ்யசபா நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் பதிவு:

இதனையடுத்து பிரதமர் மோடி முதல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரை என பலரும் இளையராஜாவுக்கு தொடர்பு கொண்டு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில், இசையமைப்பாளர் டி.கே ராமமூர்த்தி, எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் உள்ளனர். முன்பொரு காலத்தில் நிகழ்ச்சியொன்றில் இவர்கள் நால்வரும் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம். தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

Advertisement