பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போட்டிருக்கும் விழிப்புணர்வு பதிவுதான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் இசை புயலாக கருதப்படுபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இவரின் உண்மையான பெயர் திலீப் குமார். தன்னுடைய 23 வயதில், மதகுரு காத்ரி இஸ்லாமின் வழிகாட்டுதலோடு இஸ்லாம் மதத்தை தழுவிய ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறுவயதில் இருந்த இசையில் அதிக ஆர்வம் உண்டாம்.
அதனைத் தொடர்ந்து அவர் தனது சிறுவயதில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வொண்டர் பலூன்’ என்ற நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் நான்கு கீ போர்ட்கள் வாசித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே கனவு கொண்டிருந்த ஏ.ஆர். ரஹ்மான், இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 ஆம் வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக் கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம்.
ஏ. ஆர். ரஹ்மான் குறித்து:
பின்பு, பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான், முதல் முதலாக இசையமைத்தது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘யோதா’ என்ற திரைப்படம் தான். ஆனால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே தமிழில் ‘ரோஜா’ படம் வெளியானதால் ரோஜா படமே ரஹ்மானின் முதல் படமாக மாறியது. தான் இசை அமைத்த முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் ஹீட் ஆனதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார்.
ஆஸ்கார் நாயகன்:
மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வரும் ஏ. ஆர். ரஹ்மானுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்கு இசை அமைத்ததற்காக இரண்டு ‘ஆஸ்கார் விருதுகள்’ கிடைத்தது நாம் அறிந்தவையே. சினிமாவில் அறிமுகம் ஆகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்றும் பிசியான இசையமைப்பாளராக வளம் வரும் ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் சமூக நலனில் அக்கறை கொண்டவர். அவ்வகையில், அவர் உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு தனது எக்ஸ் தளத்தில் விழிப்புணர்வு பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
ஏ. ஆர். ரஹ்மான் பதிவு:
அதில், ‘ நண்பர்களே, நான் முக்கியமான ஒன்றைப் பற்றி பேச விரும்புகிறேன் – நீரிழிவு மற்றும் உங்கள் கண்கள். நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறீர்கள் என்றால், இது இரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டுமல்ல. நீரிழிவு நோயானது நீரிழிவு ரெட்டினோபதிக்கு வழிவகுக்கும், இது கடுமையான பார்வைப் பிரச்சினைகளை ஏற்படுத்தும், குருட்டுத்தன்மையையும் கூட ஏற்படுத்தும். ஆனால் இதோ ஒரு நல்ல செய்தி: வழக்கமான கண் பரிசோதனைகள் மூலம், நீரிழிவு ரெட்டினோபதியை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உங்கள் பார்வையைப் பாதுகாக்க உதவலாம்.
நண்பர்களே😍
— A.R.Rahman (@arrahman) November 13, 2024
நான் முக்கியமான ஒன்றைப் பற்றி பேச விரும்புகிறேன் – நீரிழிவு மற்றும் உங்கள் கண்கள்.
நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறீர்கள் என்றால், இது இரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டுமல்ல. நீரிழிவு நோயானது நீரிழிவு ரெட்டினோபதிக்கு வழிவகுக்கும், இது கடுமையான பார்வைப் பிரச்சினைகளை…
உலக நீரிழிவு தினம்:
இன்று நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு தினம் என்பதால் கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், அல்லது யாரையாவது அறிந்திருந்தால், உங்கள் பார்வையைப் பாதுகாக்க நடவடிக்கையை எடுக்கவும். ஒரு எளிய, வருடாந்திர கண் பரிசோதனை அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும். இந்தச் செய்தியைப் பரப்பி, ஒளிமயமான எதிர்காலத்தைக் காண அனைவருக்கும் உதவுவோம்.
நன்றி என்று சமூக அக்கறையுடன் பகிர்ந்துள்ளார்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.