பொன்னியின் செல்வன் படத்தின் பின்னணி இசைக்காக ஏ ஆர் ரகுமான் பயன்படுத்தி இருக்கும் இசைக்கருவிகள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்தினம். தற்போது இவர் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது.
அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
இதையும் பாருங்க : வயசான லவ் பண்ண கூடாது இல்ல, இப்போ தண்டனையை அனுபிக்குவிக்கிறேன் – பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோ
பொன்னியின் செல்வன் படம்:
மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள். இப்படத்தின் இரண்டு பாகங்களும் 800 கோடி பட்ஜெட் செலவில் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும், சைடில் டெக்னிகல் ஆகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.
படத்தின் டீசர்:
தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி இருக்கிறது. மேலும், டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த டீசரை பாராட்டி தங்களுடைய கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். அதிலும் இந்த டீசரில் உள்ள பின்னணி இசை மிகவும் அற்புதமாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் பின்ணணி இசைக்காக இரண்டு வருடங்கள் மெனக்கெட்டிருக்கிறார்.
ஏ ஆர் ரகுமான் பயன்படுத்திய இசைக்கருவிகள்:
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு இசைக்கருவிகளை கடந்த இரண்டு ஆண்டுகளில் தேடிப்பிடித்து வாங்கி அதனை பயன்படுத்தி இருக்கிறார். குறிப்பாக, தம்பட்டம், பம்பை, உடுக்கை, உருமி, கொம்பு, பஞ்சமுக வாத்தியம், சுந்தரவளைவு உள்பட பல இசைக்கருவிகளை வாங்கி படத்தின் பின்னணி இசைக்காக பயன்படுத்தினார். சில இசைக் கருவிகள் இந்தியாவில் கிடைக்கவில்லை என்பதால் தாய்லாந்து நாட்டில் உள்ள பாலி பகுதியில் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சோழர் காலத்து இசை ஒரிஜினலாக வரவேண்டும் என்பதற்காக ஏ ஆர் ரகுமானின் மெனக்கெடல் அதிகம் என்றே சொல்லலாம்.