பார்த்திபன் படத்தில் இருந்து விலகிய ரஹ்மான் – தனக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய மெசேஜை ஊருக்கே காட்டிய பார்த்திபன்

0
2067
- Advertisement -

தமிழ் சினிமாவில் சிறந்தா இயக்குனரும், திரைக்கதை ஆசிரியருமான பாக்யராஜின் திறமைகளையே மிஞ்சும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் கே பாக்கியராஜின் அவருடைய இதன்வி இயக்குனரும் நடிகருமான பார்த்திபன். இவர் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டு திகழ்கிறார். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரே ஷாட்டில் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படம் வெளியாகி சிங்கிள் ஷாட் பிலிம் என்ற கின்னஸ் சாதனையை படைத்து இருந்தது. மேலும், இந்த படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து இருந்தது. அதே போல இதற்கு முன்னர் பார்த்திபன் ‘ஒத்த செருப்பு’ என்ற படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த படத்தில் அவர் மட்டுமே நடித்து இருந்தார். இப்படி சினிமாவில் யாரும் செய்யாத பல சாதனைகளை செய்வதில் பார்த்திபன் கைதேர்ந்தவர்.

- Advertisement -

மேலும் சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்ன பழுவேட்டயராக நடித்து அசத்தியிருந்தார். இதனை தொடர்ந்தே தான் மூன்று படங்களை இயக்க இருப்பதாக அவர் அறிவித்த நிலையில் முதல் படத்திற்க்கு 52ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு என்று இரண்டாம் படத்திற்கு ஆண்டாள் என்றும் பெரியர் வைத்திருந்தார். மூன்றாம் படத்திற்காக பெயர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது படத்திற்கான வேலைகளிலும் மும்பரமாக இறங்கியுள்ள பார்த்திபன் தன்னுடைய படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைக்க மறுத்துள்ளது குறித்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதியவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த பதிவில் “இந்நிலையில் பார்த்திபன் போட்டிருந்த பதிவில் “பழகுதல் காதலால் விலகுதலும் காதலால் ஆதலால்…. ஒருவரை ஒருவர் போற்றி மகிழ்வோம் இறுதிவரை! வரும் படத்திலும்-இரு வரும் இணைவோமென நினைத்து இயலாதபோது நண்பர் arr அவர்களிடமிருந்து வந்த மிருது மெயில்” என்று இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் தன்னுடைய பாணியில் பதிவிட்டு அதனுடைய ஏ.ஆர். ரகுமான் அனுப்பியிருந்த ஈமெயில் பதிவையும் இணைத்திருந்தார்.

அந்த பதிவில் “தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வகையினாலும் எனக்கு அதிக வேலை மற்றும் பணிச்சுமை இருப்பதினாலும் உங்களுடைய இந்த படத்தில் என்னால் இந்த முறை எடுத்து எடுக்க முடியவில்லை. எங்களுடைய கதையை நான் ஆர்வத்துடன் கேட்டு வியந்திருக்கிறேன். திறமையும், ஆளுமையும் உள்ள இயக்குனர்களின் நீங்களும் ஒருவர். உங்களுடைய படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் வருத்தத்தில் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.

இதற்கு முன்னார் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் ஏஆர் ரகுமான் இசையனைத்திருந்தார், இப்படமானது ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பதுமட்டுமல்லாமல் ஏஆர் ரகுமானின் இசைக்கு பலவிதமான பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருந்தது. அப்படிப்பட்ட நிலையில் தான் பார்த்திபனின் அடுத்த படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைக்காதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement