அனிருத், மாளவிகா மோகனனுடன் வீடியோகாலில் பேசியுள்ள தளபதி. ரசிகர்களை குஷியில் ஆழ்த்திய மாளவிகா.

0
1850
vijaymalavika

உலகையே அச்சுறுத்தி வரு கொரோனா வைரஸால் தற்போது வரை இந்தியாவில் இந்த கொடிய நோய்க்கு இதுவரை 696 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் இதுவரை 13 பேர் இந்த கொடிய நோயினால் உயிரிழந்துள்ளார்கள். மேலும் தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை 29 பேருக்கு கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் தமிழகத்தில் இதுவரை இந்த நோயினால் ஒருவர் பலியாகி இருக்கிறார். இந்த நோய் பரவாமல் இருக்க தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Image result for malavika mohanan master audio launch

- Advertisement -

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான்.

தற்போதைக்கு இந்த நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இந்தியா முழுவது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உந்த ஊரடங்கு உத்தரவால் பலரும் வீட்டைவிட்டு வெளி வர முடியாமல் இருக்கின்றனர். மீறி வந்தால் அவர்களை போலீசார் வெளுத்து வாங்கி விடுகிறார்கள். பல்வேறு பிரபலங்களும் வீட்டில் இருந்தபடி எப்படி பொழுதை கழிப்பது என்று பல்வேறு வீடியோகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று காட்டுத்தீ போல பரவி வருகிறது.. அது என்னவேனில் மாஸ்டர் பட இசைசையமைப்பாளர் அனிருத், இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ், மாளவிகா ஆகியோர் வீடியோ கால் பேசியுள்ளனர். மேலும், இந்த வீடியோ காலில் தளபதி விஜய்யும் இணைந்துள்ளார்.

இவர்கள் நால்வரும் வீடியோ காலில் இணைந்து இருந்த போது அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதனை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன். இந்த புகைப்படத்தால் தளபதி ரசிகர்கள் படும் குஷியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், மாளவிகாவின் இந்த பதிவிற்கு இதுவரை இல்லாத அளவு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

Advertisement