சிறு வயதிலேயே தத்துக் கொடுக்கப்பட்ட அரவிந்த் சாமி – அவரது சகோதர சகோதரிகளுடன் அவர் எடுத்த ஒரே புகைப்படம் இது தான்.

0
642
- Advertisement -

அரவிந்த்சாமி என்னுடைய மகன் தான் என்று டெல்லி குமார் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் டெல்லி குமார். இவர் சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளி திரைகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, இவர் சித்தி, மெட்டிஒலி, அண்ணாமலை, ஆனந்தம், முந்தானை முடிச்சு, தலையணை பூக்கள், லட்சுமி ஸ்டோர்ஸ், பாண்டவர் இல்லம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போதும் இவர் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் பிரபல நடிகர் அரவிந்த்சாமி அவர்கள் டெல்லி குமாரின் மகன் தான் என்ற செய்தி சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக டெல்லி குமார் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், அரவிந்த்சாமி என்னுடைய மகன் தான். அவர் பிறந்த உடனே நான் என்னுடைய அக்காவிற்கு தத்து கொடுத்து விட்டேன்.

- Advertisement -

டெல்லி குமார் மகன்:

குடும்பத்தில் ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி என்றால் மட்டும் அரவிந்த்சாமி கலந்து கொள்வார். அதோடு எல்லோருமே, நீங்கள் அரவிந்த்சாமி இணைந்து படங்களில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நிச்சயம் நடிப்போம் என்று கூறி இருந்தார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அரவிந்த்சாமி. இவர் நடிகர் மட்டுமில்லாமல் தொழிலதிபரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளியை சேர்ந்தவர்.

இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த தளபதி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இருந்தாலும், இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மணிரத்தினத்தின் ரோஜா படம் தான். இந்த படம் நாடெங்கிலும் பிரபலமாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் பம்பாய், இந்திரா, மின்சார கனவு, அலைபாயுதே போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அரவிந்த்சாமி நடித்த படங்கள்:

பின் இவர் 2000 ஆண்டு முதல் நடிப்பை விட்டு தொழிலில் கவனம் செலுத்தினார். இதனால் நடுவில் அரவிந்த்சாமி சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகு கடல் என்ற படத்தின் மூலம் இவர் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து இவர் செக்க சிவந்த வானம், தனி ஒருவன்,போகன் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் கதாநாயகனாக நடித்து வந்தாலும் தற்போது இவர் வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டி வருகிறார்.

அரவிந்த்சாமி குடும்பம்:

மேலும், இவர் தன்னுடைய நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர். தற்போது அரவிந்த் சாமி அவர்கள் புலனாய்வு, சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, ரெண்டகம், நரகாசுரன் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அரவிந்த் சுவாமி அவர்கள் 1994-ம் ஆண்டு காயத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளார்கள்.

Advertisement