விஜய் 63 அப்டேட் குறித்து ட்வீட் செய்த தயாரிப்பாளர்.! கடுப்பான ரசிகர்கள்.!

0
1241
Vijay-63
- Advertisement -

சர்க்காரின் மாபெரும் வெற்றிப்படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். 

-விளம்பரம்-

கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க, கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, டேனியல்  பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

- Advertisement -

இந்த படத்தின் அறிவிப்புகள் வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையில் இந்த படத்தை பற்றிய வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அப்படியே இந்த படத்தின் அப்டேட் என்று படக்குழு வெளியிட்டாலும் அது ஏற்கனவே ரசிகர்களுக்கு தெரிந்த ஒரு விடைமயமாகவே இருந்து வருகிறது.

மேலும், இந்த படத்தின் தயாரிப்பாளரை அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் தொடர்ந்து அன்புத்தொல்லை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் குறித்து ட்வீட் செய்துள்ளார் இந்த படத்தின் தயாரிப்பலரான அர்ச்சனா கல்பாத்தி.

-விளம்பரம்-

அதில் ‘உங்களை போல நானும் தயாரிப்பாளரிடம் அப்டேட் கேட்டுகொண்டே இருக்கும் ஒரு சாதாரண நபர் தான் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். தளபதி 63 யின் அப்டேட் குறித்து நேரத்தில் வெளியாகும். உங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நாங்கள் நேரம் பார்க்காமல் உழைத்துக்கொண்டிருக்கிறோம் ‘ என்று ட்வீட் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

Advertisement