லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி இருக்கும் ‘ஆர் யூ ஓகே பேபி’ எப்படி ? முழு விமர்சனம் இதோ.

0
2936
- Advertisement -

இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஆர் யூ ஓகே பேபி. இந்த படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, வினோதினி வைத்தியநாதன், கலையரசி, அனுபமா குமார், விஜே ஆஷிக், ஆடுகளம் நரேன், ரோபோ ஷங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார், கிருஷ்ணசேகர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் சமுத்திரகனியின் ஆர் யூ ஓகே பேபி படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் நாயகி அபிராமி, அவருடைய அம்மா கலையரசி மற்றும் அபிராமியின் கைக்குழந்தை ஆகியோர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் சமுத்திரகனி தொழிலதிபராக இருக்கிறார். இவர் சொல்லாததும் உண்மை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் கதாநாயகி அபிராமிக்கு தொலைபேசி மூலம் பேசுகிறார்.

- Advertisement -

அப்போது குழந்தையை சட்டத்திற்கு புறம்பாக தத்தெடுத்தல் என்ற பெயரில் அபிராமி கடத்தி வைத்திருப்பதாக லட்சுமி ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டுகிறார். ஆனால், அதை நாயகி அபிராமி மறுக்கிறார். பின் விறுவிறுப்பாக விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இறுதியில் அந்த குழந்தை யார்? அந்த குழந்தை யாருடையது? சமுத்திரக்கனிக்கும் அபிராமிக்கும் என்ன உறவு? இறுதியில் குழந்தை யாரிடம் சென்றது என்பதே படத்தின் மீதி கதை,

படத்தில் முக்கிய கதாபாத்திரங்களான சமுத்திரக்கனியும் அபிராமியும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி குழந்தையாக நடித்திருக்கும் முல்லை அரிசியின் கதாபாத்திரமும் சிறப்பாக இருக்கிறது. இவர்களைத் தொடர்ந்து நடுவராக வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் உடைய கதாபாத்திரமும் சிறப்பாக இருக்கிறது. ஆரம்பத்தில் கதை விறுவிறுப்பாக சென்றாலும் பின் தேவையில்லாத காட்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் சோதிக்க வைத்திருக்கிறது.

-விளம்பரம்-

இவர்களை அடுத்து படத்தில் வரும் நிறைய கதாபாத்திரங்கள் வேலையே இல்லை என்றே சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் சிறப்பு வேடத்தில் வரும் மிஸ்கினும் எதற்கு வந்தார் என்றே தெரியவில்லை. வந்த உடனே சென்று விடுகிறார். மேலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் அடிப்படையை வைத்து இந்த கதையை இயக்குனர் உருவாக்கி இருப்பதை ஏற்கனவே சொல்லி இருந்தார்.
ஆனால், படத்தில் எது உண்மை? பின்னணி கதை? என்று முழுமையாக தெளிவாக கொடுக்காமல் இயக்குனர் குழப்பி வைத்திருக்கிறார்.

இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு ஆறுதலை கொடுத்திருக்கிறது. ஆனால், பாடல்கள் தான் பெரிதாக எடுபடவில்லை. ஒரு சாதாரண நிகழ்ச்சியை இரண்டு மணி நேரம் திரையில் காண்பித்திருப்பது பார்வையாளர்களை சோதித்து இருக்கிறது. கதை நன்றாக இருந்தாலும் அதை இயக்குனர் கொண்டு சென்ற விதத்தில் தான் சுதப்பி இருக்கிறார். அதோடு படத்தில் நிறைய தேவையில்லாத காட்சிகள், வசனங்கள் வந்திருக்கிறது. சமூகத்திற்கு ஒரு நல்ல மெசேஜை சொல்லும் வகையில் இந்த படம் அமைந்திருக்கிறது.

தாயுள்ளம், குழந்தை மீதான ஏக்கம், ஒடுக்கப்பட்ட பெண்ணின் குழந்தையை சட்டத்திற்கு புறம்பாக விலை கொடுத்து வாங்குவது போன்ற பல பிரச்சனைகளை இந்த படத்தில் இயக்குனர் காண்பித்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. இருந்தாலும் அதை மக்களுக்கு கொண்டு செல்லும் பாஷையில் புரிய வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் ரொம்ப சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

சமுத்திரகனி, அபிராமி நடிப்பு சிறப்பு

சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை

பின்னணி இசை ஓகே

உணர்ச்சிபூர்வமான காட்சிகள்

குறை:

திரை கதையை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

நிறைய லாஜிக் குறைபாடுகள்

ஆரம்பம் நன்றாக இருக்கிறது ஆனால், கடைசிவரை சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

படம் எப்போது முடியும் என்று சோதிக்கும் அளவிற்கு காட்சிகள் நகர்ந்து இருக்கிறது

மொத்தத்தில் ஆர் யூ ஓகே பேபி- ஏமாற்றம்

Advertisement