ஆமாம், எனக்கும் அப்படி தான் தோன்றியது, எரியும் தீயில் என்னை ஊற்றிய ஷாருக் பதில் – அப்போ உண்மையில் அட்லீ மீது கோபமாக இருக்கிறாரா நயன் ?

0
3398
Atlee
- Advertisement -

ஜவான் படத்தில் நயன்தாராவின் ரோல் குறித்து ஷாருக்கான் பேசி இருக்கும் விஷயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான அட்லீ பிகில் படத்தைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ்வான விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது. பலரும் இந்த படத்தை பார்த்து அட்லியையும் ஷாருக்கானையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்கள். இதை அஜித் நடித்த ஆரம்பம் படம் மாதிரியே இருக்கிறது என்றெல்லாம் கிண்டல் செய்து பதிவுகளை பதிவிட்டு இருந்தார்கள்.

- Advertisement -

மேலும், ஜவான் படம் படுதோல்வி அடைந்திருப்பதை குறித்து நெட்டிசன்கள் அட்லீயை பங்கமாக கலாய்த்து இருந்தார்கள்.இது ஒரு பக்கம் இருக்க, பட குழுவினர் ஜவான் படத்தின் வெற்றி விழாவை சமீபத்தில் கொண்டாடியிருந்தார்கள். இந்த நிலையில் படத்தின் வெற்றிவிழாவிற்கு கூட நயன்தாரா வராததற்கு காரணம் அட்லீ தான் என்ற சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது, ஜாவான் படத்தினால் நயன்தாரா அவர்கள் அட்லீ மீது பயங்கர கோபத்தில் இருக்கிறாராம். காரணம், இந்த படத்தில் நயன்தாரா உடைய கதாபாத்திரத்தை நிறைய அட்லீ கட் செய்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தீபிகா படுகோனாவிற்கு இந்த படத்தில் கேமியோ ரோல் தான்.உண்மையில் அப்படி படத்தில் காண்பிக்கவில்லை. நயன்தாராவை விட அதிகமாக தீபிகா கதாபாத்திரம் பேசப்பட்டு இருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், சாருக்- தீபிகா உடைய படம் தான் ஜவான் என்றும் கூறியிருக்கிறார்கள். இதனால் தான் அட்லி மீது நயன்தாரா கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலே ஜவான் படத்தின் வெற்றி விழாவில் கூட நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. அது மட்டும் இல்லாமல் இனி பாலிவுட் பக்கமே நயன்தாரா போக மாட்டார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் ஜவான் படத்தில் நயன்தாராவின் ரோல் குறித்து ஷாருக்கான் பேசி இருக்கும் விஷயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர் ஒரு ஜவான் படத்தில் சிங்கிள் அம்மாவாக நடித்த நர்மதா கதாபாத்திரத்தை பாராட்டி பதிவு ஒன்றை போட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த ஷாருக்கான் ‘ சிங்கிள் அம்மாவாக நர்மதாவின் ரோல் சிறப்பாக இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அதற்கு அதிகம் ஸ்கிறீன் டைம் கிடைக்கவில்லை. ஆனால் அதுவும் சிறப்பாக தான் இருந்தது’ என்று பதிவிட்டுள்ளார். ஷாருக்கானின் இந்த பதிலால் நயன்தாரா உண்மையில் தனக்கு குறைந்த காட்சிகளை வைத்த அட்லீ மீது கோபத்தில் இருக்கிறார் என்ற சர்ச்சையில் மேலும் எண்ணையை ஊற்றி இருக்கிறது.

Advertisement