நடிகர் அர்ஜுனின் மகள் வித்தியாசமான தொழிலை தொடங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் 90 கால கட்டம் தொடங்கி இன்று வரை பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலும் இவர் ஆக்ஷன் படங்களில் தான் நடித்து வருகிறார். இவர் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதுமட்டும் இல்லாமல் 90 காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவின் புரூஸ்லி என்று பெயரெடுத்தவர் நடிகர் அர்ஜுன். இவர் 1984 ஆம் ஆண்டு நன்றி என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ஆக்ஷன், அதிரடி, தேசப்பற்று பாணியில் இருக்கும். இதனாலே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகம் என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.
இதையும் பாருங்க : உண்மையா இது நீங்க தானா, இல்ல ட்ரெஸ் அப்படி இருக்கா – நிவேதா தாமஸ்ஸின் லேட்டஸ்ட் வீடியோவை கண்டு ரசிகர்கள் கேள்வி.
அர்ஜுனின் திரைப்பயணம்:
அதேபோல சுமார் 5க்கும் மேற்பட்ட பாடல்களையும் அர்ஜுன் பாடி இருக்கிறார். தற்போது அர்ஜுன் வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் மிரட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சாகச நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியையும் அர்ஜுன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி இருந்த மரைக்காயர் படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகர் அர்ஜுனின் குடும்பம்:
இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து அர்ஜுன் தற்போது 2 தமிழ் படங்களிலும், ஒரு மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் அர்ஜுன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரது முதல் மகள் ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டது யானை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.
தொழிலதிபரான அர்ஜுனின் இளைய மகள்:
அதன் பின்னர் அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்திலும் நடித்தார். இருந்தாலும் இவர் தன் தந்தையை போல் சினிமாவில் இடம் பிடிக்க முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில் அர்ஜுனின் இளைய மகள் தொழிலதிபராக இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .அர்ஜுனனின் இரண்டாவது மகளின் பெயர் அஞ்சனா. தற்போது இவர் பெண்களுடைய ஹேண்ட் பேக் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கி இருக்கிறார். பெண்களின் ஹேன்ட் பேக்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உலகில் பல இருக்கிறது.
வைரலாகும் புகைப்படம்:
இருந்தாலும், உலகிலேயே முதல்முறையாக பழ தோலில் இருந்து ஹேண்ட் பேக்குகளை தயாரிக்கும் பிசினஸை அஞ்சனா தொடங்கி இருக்கிறார். மேலும், அஞ்சனா தொடங்கி இருக்கும் நிறுவனத்தின் தொடக்க விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டிருந்தார். பின் அவர் அர்ஜுனின் மகளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். தற்போது இது குறித்த புகைப்படம் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் அர்ஜுனின் மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.