குடும்பத்தை பற்றி இனி பேசினால், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அருண் விஜய் புகார்

0
365
- Advertisement -

பிரபல youtube சேனல் மீது நடிகர் அருண் விஜய் கொடுத்திருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன். இவர் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இருந்தாலும், இவருக்கு தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர்.

-விளம்பரம்-

கடந்த 23 ஆண்டுகளுக்கு மேல் அருண் விஜய் சினிமா துறையில் இருந்து வந்தாலும் பல வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். பின் இவர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இந்த படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி தந்தது. அதற்குப் பிறகு இவர் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், ஹீரோவாகவும் மிரட்டி கொண்டு வருகிறார். சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மிஷன் சாப்டர் 1.

- Advertisement -

இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் எமி ஜாக்சன் , நிமிஷா சஜயன், பரத் போப்ன்னா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகியன இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது. இதை அடுத்து தற்போது அருண் விஜய் அவர்கள் பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருக்கிறார்.

வணங்கான் படம் :

ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.சமீபத்தில் தான் இந்த டீசர் வெளியானது. தற்போது இந்த படத்தினுடைய இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அருண் விஜய் படங்களில் கமிட் ஆகி நடித்த வருகிறார். சமீபத்தில் தான் அருண் விஜயின் அக்கா மகள் தியாவிற்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.

-விளம்பரம்-

அருண் விஜய் அளித்த புகார்:

இந்த நிலையில் அருண் விஜய் பிரபல youtube சேனல் மீது அருண் விஜய் கொடுத்திருக்கும் புகார் தான் தற்போது இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அதில் அவர், என்னைப் பற்றியும் என்னுடைய தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் குறித்து மோசமான வார்த்தைகளை தனியார் யுடியூப் சேனல் ஒன்று வீடியோக்களாக பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறது. இதனால் என்னுடைய குடும்பத்தினருக்கு அதிக மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது.

புகாரில் கூறி இருப்பது:

தவறான தகவல்களை பதிவிட்ட நபர்கள் மீதும் அந்த சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அருண் விஜய் புகார் அளித்து இருக்கிறார். தற்போது இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976யில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் தான் அருண் விஜய், அனிதா , கவிதா. மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி.

Advertisement