தமிழில் வெளியான அருவி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை அதிதி பாலன் நான்கு ஆண்டுகளாக சினிமாவில் ஏன் நடிக்கவில்லை என்ற காரணத்தை கூறியுள்ளார். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படங்களில் ‘அருவி’ படம் வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்தது. மேலும், இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்களிடமும்,மக்களிடமும் நல்ல வரவேற்பும், விமர்சனமும் கிடைத்தது. இந்த படத்தை இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் அவர்கள் இயக்கி இருந்தார்கள்.
முழுக்க முழுக்க ‘சமூக –அரசியல்’ உள்ள திரைப்படமாக இருந்தது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை அழகாக சித்தரித்திருந்தார் இயக்குனர். இந்த படம் நுகர்வியம் மற்றும் பெண் வெறுப்பு கொண்டுள்ள நவீன பண்பாட்டின் இயல்புகளில் இருந்து வெளிப்படையை விளக்குகின்ற கதையாகும். மேலும், வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் வலி, சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளினால் பாதிக்கப்படும் பெண்ணின் நிலை அதனால் அந்தப் பெண் எவ்வாறு எதிர்கொண்டு போராடுகிறார் என்பதே அருவியின் கதை.
இதையும் பாருங்க : மகன் இருக்கும் நிலையில் 13 ஆண்டுகள் கழித்து இரண்டாம் குழந்தைக்கு தாயான ஜெனி. என்ன குழந்தை தெரியுமா ?
அதிதி பாலன் அவர்கள் “அருவி” படத்திற்கு முன்பே அஜித் அவர்களின் ‘எண்ணை அறிந்தால்’ படத்தில் திரிஷாவின் தோழியாக நடித்துள்ளார். அருவி தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் அதிதி பாலன் நடிக்கவில்லை. இடையில், ஒரு ஆந்தாலஜி படத்தில் மட்டும் நடித்தார். இந்நிலையில், பிருத்திவிராஜ் நடிப்பில் உருவான ‘கோல்டு கேஸ்’ மலையாள படத்தில் அதிதி நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது.
நான்கு வருடங்களாக தமிழ் சினிமாவில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு சமீபத்தில் பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். அதில் “அருவி படத்துக்குக்குப் பிறகு நான் எடுத்துக்கொண்ட இந்த இடைவெளி நிறைய பேருக்கு மிக நீண்டதாகத் தோன்றலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, இது சினிமாவைப் புரிந்துகொள்வதற்காக நான் தேர்ந்தெடுத்த ஒரு வழி.கடந்த சில ஆண்டுகளாக இந்த இடைவெளியில் நன்றாகவே திரைத்துறையைப் புரிந்துகொண்டேன். சினிமாவில் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைக் கண்டுபிடிக்கவும், சினிமா தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இடைப்பட்ட இந்த நேரத்தை நான் பயன்படுத்திக்கொண்டேன்