சபரிமலை….உச்சநீதிமன்ற தீர்ப்பு..! அருவி பட நடிகை சர்ச்சை பேச்சு..!

0
761
Sabari-malai
- Advertisement -

கடந்த சில வாரங்களாக உச்ச நீதி மன்றம் பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி வருகிறது. ஓரினச்சேர்க்கை குற்றமில்லை, திருமணத்திற்கு பின் தகாத உறவு குற்றமில்லை போன்ற தீர்ப்புகளை தொடர்ந்து சபரி மலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பை வழங்கி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

sabarimala

- Advertisement -

இத்தனை ஆண்டுகள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரி மலை சன்னதியில் அனுமதிக்கபடாமல் இருந்த நிலையில் நானும் மூன்று முறை சபரிமலை சென்றுள்ளேன் என்று “அருவி ” படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை அதிதி கூறியுள்ளார்.

சபரிமலையில் இளம் பெண்களுக்கு அனுமதி வேண்டும் என்ற 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அன்று முதல் சபரி மலைக்கு பெண்கள் அனுமதிக்கபடாதா இருந்த நிலையில் பெண்களை வழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்தனர்.

-விளம்பரம்-

Aditi-balan

இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று (செப்டம்பர் 30) வெளியான நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று வந்த நிலையில் ஐயப்ப பக்தர்கள் சிலர் பிரம்மசாரி கடவுளான ஐயப்பன் கோவிலுக்கும் பெண்கள் வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அதிதி, நான் சட்டம் படித்தவள் அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.சபரி மலைக்கு அணைத்து தரப்பு பெண்களும் அனுமதிக்கபட வேண்டும் என்ற தீர்ப்பு வரவேற்கதக்கது. நானும் மூன்று முறை சபரிமலை சென்றுள்ளேன், இந்த தீர்ப்பின் மூலம் நான் மீண்டும் சபரி மலைக்கு செல்லும் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

Advertisement