எனக்கு 44 வயசெல்லாம் இல்ல, இத்தன வருஷமா திருமணம் செய்துகொள்ளாத காரணம் இது தான் – புது மணப்பெண் லாவண்யா

0
1135
lavanyadevi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் லாவண்யா தேவி. இவர் 1979 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த சூரிய வம்சம் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த படையப்பா படத்தின் மூலம் லாவண்யா ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார் என்று சொல்லலாம். அதனை தொடர்ந்து இவர் ஜோடி, சேது, திருமலை, வில்லன், எதிரி, ரன், சமுத்திரம், சுந்தரா டிராவல்ஸ், நான் தான் பாலா உட்பட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
lavanya

இதுவரை இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், மாதவன் என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். அதற்குப் பின் லாவண்யாவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்று விட்டார்.தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் அருவி தொடரும் ஒன்று.

- Advertisement -

இந்த தொடரில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் லாவண்யா தேவி நடித்து வருகிறார். இந்த தொடர் ஒளிபரப்பான நாளிலிருந்து தற்போது வரை பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நடிகை லாவண்யா தேவிக்கு திருமணம் ஆகியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் பிரசன்னா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுடைய திருமணம் திருப்பதியில் நடைபெற்றிருக்கிறது. மேலும், இவர்களுடைய திருமணத்தில் சீரியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் திருமணத்திற்கு பின் பேட்டி அளித்துள்ள லாவண்யா ‘தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால், கொரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகள் நடிப்பில் இருந்து கொஞ்சம் பிரேக்எடுத்துக் கொண்டேன். அதன் பின்னர்தான் அருவி சீரியல் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

தற்போது அந்த சீரியலும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. நான் திருமணமே வேண்டாம் என்று எல்லாம் எண்ணி தள்ளிப் போடவில்லை. நடிப்பில் கவனம் செலுத்தியதால் அது அப்படியே தள்ளிக் கொண்டு போய் விட்டது. என்னுடைய குடும்பம் தான் எனக்கு மிகப்பெரிய பலம் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேள்விகளை நான் எதிர்கொண்டதே இல்லை என்று கூறியிருக்கிறார்.

அதேபோல லாவண்யாவின் திருமணம் செய்து சமூக வலைதளத்தில் வெளியான போது 44 வயதில் திருமணமா என்ற விமர்சனமும் எழுந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது ‘எனக்கு தற்போது 43 வயசு தான் ஆகிறது, வயசு தப்பாக போட்டிருக்கிறார்கள். வயது என்பது வெறும் நம்பர் தானே. இது போன்ற செய்திகளை எல்லாம் என்னை காயப்படுத்த வில்லை. என்னுடைய கணவர் பிரசன்னாவும் என்னுடைய கேரியருக்கு ஆதரவாக தான் இருக்கிறார். படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயம் மீண்டும் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார் லாவண்யா.

Advertisement