ஆர்யா மகளின் பிறந்த நாளுக்கு சாய்ஷாவின் அம்மா கொடுத்திருக்கும் பரிசு தற்போது சோசியல் மீடியாவில்
வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை, டெடி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
ஆனால், இதனை தொடர்ந்து இவர் நடித்த கேப்டன் படம் படு தோல்வியடைந்து. மேலும், சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த படம் காதர் பாட்ஷா. இந்தப் படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை சித்தி இத்தானி நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் ஆடுகளம் நரேன், தமிழ், மதுசூதரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
ஆர்யா – சயிஷா திருமணம்:
இதனை அடுத்து ஆர்யா அவர்கள் சார்பட்டா 2, பாஸ் என்கிற பாஸ்கரன் 2 போன்ற படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த படத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது. இதனிடையே நடிகர் ஆர்யா – நடிகை சயிஷாவின் திருமணம் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி படு கோலாகலமாக நடைபெற்றது. வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா.
ஆர்யா – சயிஷா குழந்தை:
இவர், ஆர்யாவுடன் சேர்ந்து கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் போது தான் இவர்கள் இருவருக்கும் மத்தியில் காதல் மலர்ந்தது. பின் இவர்கள் காப்பான் என்ற படத்திலும் நடித்திருந்தார்கள். அதன் பின் கடைசியாக இவர்கள் இருவரும் சேர்ந்து டெடி என்ற படத்தில் நடித்திருந்தார்கள். மேலும்,.இவர்களுக்கு 2021ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. சில மாதங்களாகவே ஆர்யா மகளின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது
ஆர்யா மகள் பிறந்தநாள்:
தற்போது ஆர்யா – சயிஷா இருவரும் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் ஆர்யா- சயீஷா இருவரும் தங்கள் மகளின் பிறந்தநாளை கொண்டாடியிருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது ஆர்யா- சாய்ஷா தங்கள் மகளின் இரண்டாவது பிறந்த நாளை நேற்று கொண்டாடி .இருக்கிறார்கள். இந்த விழாவை அவர்கள் வீட்டிலேயே சிம்பிளாக குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார்கள். மேலும், இந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாயீஷா அம்மா கொடுத்த பரிசு:
இந்த வீடியோவை 3 லட்சத்துக்கும் மேல் பார்த்து ட்ரெண்டிங் ஆக்கி இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் அந்த வீடியோவில் தன்னுடைய மகளின் பிறந்தநாளின் போது சாயிஷா ஒரு சுவாரசியமான தகவலையும் சொல்லி இருக்கிறார். அது, சாய்ஷா தன்னுடைய இரண்டாவது வயதில் பிறந்தநாள் கொண்டாடும் போது பயன்படுத்திய இரண்டு என்கிற மெழுகுவர்த்தியை தான் அவருடைய அம்மா தன்னுடைய மகளின் பிறந்த நாளுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். 24 வருடங்களாக அதை பாதுகாப்பாக வைத்திருந்து கொடுத்து இருக்கிறார். அந்த மெழுகுவர்த்தியை ஏற்றி தான் சாயிஷா மகளின் பிறந்தநாள் கேக் வெட்டி இருக்கிறார்.