இதனை வாரங்கள் நம்மல சிரிக்க வைத்துவிட்டு, இப்போ இப்படி அழுறத பாக்கும் போது நமக்கே அழுக வருதே – கண்ணீர் விட்டு அழும் குக்கு வித் கோமாளி பிரபலங்கள்.

0
1599
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதி கட்டம் குறித்த எமோஷனல் ஆன வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நிலையில் இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம்.

- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4:

இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் 4 சீசன் நடைபெற்று வருகிறது. இதில் நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, ஆண்ட்ரியன், ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி, VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அதோடு இந்த முறை கோமாளியாக இருந்த சிவாங்கி போட்டியாளராக கலந்து இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் முதலில் விசித்ரா, மைம் கோபி, கிரன், சிவாங்கி, ஸ்ருஷ்டி ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருந்தார்கள். பின் எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. இதில் ஆண்ட்ரியன் தேர்வாகி இருக்கிறார். ஆகவே, இந்த நிகழ்ச்சியில் மைம் கோபி, விசித்ரா, கிரன், சிவாங்கி, ஸ்ருஷ்டி, ஆண்ட்ரியன் ஆகிய ஆறு பேரும் பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-

பைனலிஸ்ட் குறித்த தகவல்:

இதில் யாரு பேரும் பெறுவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த வாரம் இறுதி சுற்று நடைபெற இருப்பதால் இது தொடர்பான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் போட்டியாளர்களும் நடுவர்களும் கண்கலங்கி பேசி இருக்கிறார்கள்.

மேலும், இந்த இறுதி கட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாகாபா ஆனந்த், பிரியங்கா, இயக்குனர் மாரி செல்வராஜ் உட்பட பலரும் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்து இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து, மக்களை சிரிக்க வைத்தார்கள் தற்போது அழுவதை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement