இப்போதே தங்கள் மகளுக்காக ஆர்யா – சயீஷா செய்துள்ள விஷயம். அதுக்குள்ள இவ்ளோ பேமஸ்ஸா

0
806
arya
- Advertisement -

ஜோதிகா, பிரசன்னா – ஸ்னேகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் ஆர்யா – சயீஷா ஜோடியும் உள்ளார். பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி கடந்த வருடம் ஒளிபரப்பானது. இதில் கலந்துகொண்ட 18 பெண்களில் நடிகர் ஆர்யா தனக்கு விருப்பமான ஒரு பெண்ணை தேர்வு செய்யும் வகையில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு சுற்றுகள் இடம்பெற்றன.

-விளம்பரம்-

இறுதிச்சுற்றில் மூன்று பெண் போட்டியாளர்கள் தேர்வாகினர். அதில் சுசானா, சீதாலட்சுமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ஒருவரை ஆர்யா தேர்ந்தெடுப்பார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் மூன்று போட்டியாளர்களில் இருந்து ஒருவரை என்னால் தேர்வு செய்ய முடியாது.எனக்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படுகிறது. ஒருவரை இப்போது தேர்வு செய்தால் மற்ற இருவரும் ஏமாற்றம் அடைவார்கள் என்று நடிகர் ஆர்யா தன்னுடைய முடிவை அறிவித்தார்.

- Advertisement -

இந்தநிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண்களை நடிகர் ஆர்யா ஏமாற்றி விட்டதாகவும், நிகழ்ச்சியில் தனக்கான ஜோடியைத் தேர்ந்தெடுக்க மறுத்துவிட்டார் என்றும் பார்வையாளர்கள் தங்களது விமர்சனங்களை சமூகவலைதளங்களில் முன்வைத்தனர். நடிகர் ஆர்யா – நடிகை சயிஷாவை திருமணம் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி படு கோலாகலமாக நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

2019ம் ஆண்டு ஆர்யா மற்றும் சயீஷாவிற்கு திருமணம் நடந்தது,அதன் பிறகு டெடி என்ற என்ற படத்தில் கனவன், மனைவி இருவருமே ஜோடியாக நடித்தனர்.அவர்களுக்கு 2021ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்து அதை நடிகர் விஷால் தனது டுவீட்டர் பக்கத்தில் வெளீயிடடார். தங்கள் மகளுக்கு ஆரியானா என்று பெயர் வைத்துள்ளனர். அப்படி என்றால் மிகவும் புனிதமான என்று ஆதாரமாம்.

-விளம்பரம்-

ஆனால், இதுவரை தனது மகளின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட சயீஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கூட மகளின் முகத்தை காட்டாமல் தான் இருந்தார். இந்த நிலையில் ஆர்யா – சயீஷா இருவரும் தங்கள் மகளுடன் Outing சென்ற போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

அதே போல தனது மகள் பெயரில் ஆர்யா – சயீஷா இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றையும் துவங்கி இருக்கின்றனர். அதில் தங்களுடைய மகளின் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகின்றனர். இவர்கள் மகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டும் இதுவரை 57ஆயிரத்திற்கும் மேல் அதிகமானோர் பின் தொடர்ந்து இருக்கின்றனர்.

Advertisement