மீண்டும் ஒரு திரில்லர் கதை கேப்டன் படத்தில் விட்டைதை பிடித்தாரா ஆர்யா – ‘தி வில்லேஜ்’ விமர்சனம்.

0
470
- Advertisement -

இயக்குனர் மிலந் ராவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெப் தொடர் தி வில்லேஜ். இதில் ஹீரோவாக ஆர்யா நடித்திருக்கிறார். இன்று இந்த வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஆர்யா மருத்துவராக இருக்கிறார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் நாகப்பட்டினத்தில் வாழ்ந்து வந்தார். ஏதோ சில காரணங்களால் இவர் சென்னைக்கு வருகிறார். அப்போது வரும் போது கட்டியல் என்ற கிராமத்தில் கார் பிரேக் டவுன் ஆகிறது. பின் ஆர்யா தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை காரில் இருக்க சொல்லி ஊருக்குள் சென்று உதவிக்கு யாராவது அழைக்க செல்கிறார்.

- Advertisement -

மேலும், திரும்பி வந்து பார்க்கும்போது ஆர்யாவின் மனைவி, குழந்தைகள் யாருமே காரில் இல்லை. அதிர்ச்சியில் ஆர்யா நிற்கிறார்? ஆர்யா, மனைவி- குழந்தைக்கு என்ன ஆனது? இதற்கெல்லாம் காரணம் யார்? இறுதியில் தன்னுடைய மனைவி குழந்தைகளை ஆர்யா கண்டுபிடித்தாரா? என்பதே இத்தொடரின் கதை. வழக்கம் போல் ஆர்யா தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த வெப் தொடர் ஆரம்பத்தில் பார்வையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. முதல் எபிசோடில் இயக்குனர் சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஆனால், அதற்குப் பிறகு வந்த காட்சிகள் எல்லாம் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. குறிப்பாக, மூன்றாவது, நாலாவது எபிசோடு எல்லாம் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், 5வது எபிசோடு தூள் கிளப்பு இருக்கிறது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

மேலும், 5வது எபிசோடில் ஆர்யாவுடைய காட்சிகளும் இயக்குனர் கொண்டு சென்ற விதமும் பட்டையை கிளப்பி இருக்கிறது. ஆறாவது எபிசோடு பெரிதாக இல்லை என்றாலும் இறுதி சிறப்பாக இயக்குனர் முடித்து இருக்கிறார். மொத்தத்தில் சில இடங்களில் தொய்வுகள் இருந்தாலும் இயக்குனரின் கதைக்களம் ஓகே. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆர்யாவின் இந்த வெப்தொடர் ஒருமுறை சென்று பார்க்கலாம்.

நிறை:

நடிகர்களின் நடிப்பு சிறப்பு

கதைக்களம் ஓகே

முதல், ஐந்தாவது எபிசோடு தூள்

பின்னணி இசை, ஒளிப்பதிவு நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது

குறை:

சில இடங்களில் சில எபிசோடுகள் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்திருக்கிறது

3,4 எபிசோடு எல்லாம் சொதப்பல்

இன்னும் கொஞ்சம் கதைக்களத்தில் வலுவை இயக்குனர் கொடுத்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்

இறுதி அலசல்:

மொத்தத்தில் இந்த வெப் தொடர் 4:00 மணி நேரம் 15 நிமிடம் சென்றிருக்கிறது. இதில் சில எபிசோடுகள் கடுப்பை ஏற்றியிருந்தாலும் முதல் மற்றும் இறுதியில் இயக்குனர் தூள் கிளப்பி இருக்கிறார். சினிமா விரும்பிகளுக்கு தி வில்லேஜ் சென்று சென்று பார்க்கலாம்.

Advertisement