NOTA – திரைவிமர்சனம்

0
308
NOTA-1

தெலுங்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “அர்ஜுன் ரெட்டி ” என்ற படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா. தற்போது அறிமுக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் “நோட்டா” என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

NOTA-Movie

படம்:- நோட்டா
நடிகர்கள் :- விஜய் தேவர்கொண்டா, மெஹரீன் பரிஸாடா, நாசர், சத்யராஜ், எம் எஸ் பாஸ்கர், யாஷிகா ஆனந்த்
இயக்குனர் :- ஆனந்த் ஷங்கர்
தயாரிப்பு:- ஸ்டூடியோ கிறீன் ஞானவேல் ராஜா
இசையமைப்பாளர்:- சாம் சி எஸ்
வெளியான தேதி :– 05-10-18

கதைக்களம்:

படத்தில் இடம் பெரும் ஒரு பல காட்சிகள் நமக்கு அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தை நினைவூட்டுகிறது. முதல்வன் படத்தின் லேட்டஸ்ட் வெர்ஸன் தான் இந்த “நோட்டா”. படத்தில் தமிழகத்தின் முதல்வராக உள்ள நாசர் ஊழல் குற்றச்சாட்டால் சிறைக்கு சென்று விடுகிறார். அவருக்கு பதிலாக அவர் வரும் வரை நாசரின் மகனனான விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார்.

NOTA-1

ஹீரோவான விஜய்க்கு அரசியலில் சற்றும் அனுபவம் இல்லை. இருப்பினும் நாசர் ஓரிரு நாளில் ஜாமினில் வெளிவருவர் என்று பார்த்தால் எதிர்பாராத விதமாக நாசருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துவிடுகிறது. இதனால் ஹீரோவுக்கு முதலமைச்சர் பதவியை தொடர வாய்ப்பு கிடைத்து விடுகிறது. இளம் முதலமைச்சராக இருக்கும் ஹீரோ அப்பாவை போலவே ஊழல் செய்யாமல் அரசியல் வாதிகளை திருத்த பார்க்கிறார்.

மீதி கதையை தமிழ் நாட்டில் நடைபெற்ற கூவத்தூர் ரெசார்ட் சம்பவம், அப்போல்லோ ஹாஸ்பிடல் மர்மம், பேனர் கலாச்சாரம், அரசியல் வாதிகள் காலில் விழும் கலாச்சாரம் என்று தமிழக அரசியலில் நடைபெற்று வரும் பல விடயங்ககளை நம் கண் முன்னே கொண்டு வருகின்றனர். இறுதியில் ஹீரோ என்ன செய்தியை சொல்ல வருகிறார் என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.

பிளஸ்:

படத்தின் முக்கிய பலமே ஹீரோ தேவர்கொண்டா தான். தமிழே தெரியவில்லை என்றாலும் கதாபாத்திரத்துடன் கலந்து அவர் பேசும் வசனங்கள் சூப்பர். இருப்பினும் மொழியில் கொஞ்சம் சௌகார்பேட்டை சாயல் தெரிகிறது. படத்தின் கதையும் ஒரு முக்கிய பலமாக இருக்கிறது நடைமுறை ஆட்சியில் நடக்கும் சில கேளிக்கை தனமான கூத்துக்களை காண்பித்துள்ள விதம் மிகவும் அருமை.மற்ற பிளஸ் என்றால் படத்தின் இசையை கூறலாம்.

vijay

மைனஸ்:

ஒரு கோணத்தில் அரசியல் ஊழல், இளைஞர் அரசியல் என்று இருந்தலும் ஒரு கோணத்தில் இது ஒரு ஸ்கூப் படம் போல தான் தெரிகிறது. படத்தின் ஒரு சில காட்சிகளில் போலித்தன்மை மிகுந்து காணப்படுகிறது. அதே போல படத்தின் கலை இயக்குனர் படத்திற்கு மெனெக்கெடுத்தது போலவும் தெரியவில்லை.

கிளாப்ஸ்:

எப்போதும் குனிந்து கொண்டே இருக்காதீங்க கொஞ்சம் நிமிர்ந்த என் முகத்தை பாருங்க அப்புறம் சிலை வைக்கும் போது வேறு யாராவது மூஞ்சி போல இருக்க போகுது என்று நாசர் பேசும் வசனமாகட்டும், செம்பரம்பாக்கம் ஏறி திறந்து விட பட்டதற்கான காரணத்தை சொல்லும் விதமாகட்டும். இப்படி பல காட்சிகளில் கைதட்டல் அள்ளுகிறது.

இறுதி மதிப்பீடு:

இக்காலத்தின் அரசியல் சூழ்நிலைக்கு தேவையான படம் என்றாலும் மக்கள் ஏற்கனவே அறிந்த விடயத்தை தான் இதிலும் சொல்லி இருக்கின்றனர். அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்திகளையும், அரசியல் வாதிகளை கிண்டலடிக்கும் விடயங்ககளை மிகவும் தைரியமாக வெளிச்சம் போட்டு காட்டியதற்கு ஒரு சபாஷ். மொத்தத்தில் இந்த படத்திற்கு Behind Talkies மதிப்பு 6.5/10