மொயின் அலி என்கிட்டே கேட்டாறு வலிமைனா என்னனு ? கூகுள் பண்ணி பாத்தப்ப சிரிப்பு வந்துடிச்சி – அஜித் ரசிகர்கள் குறித்து அஸ்வின். வீடியோ இதோ.

0
1492
aswin
- Advertisement -

வலிமை படத்தின் அப்டேட்டை சம்மந்தமே இல்லாமல் இடங்களில் கேட்ட தனது ரசிகர்களின் செயல்பாடுகள் தனக்கு வருத்தமளிக்கிறது என்று அஜித் அறிக்கை வெளியிட்டதை அஜித் ரசிகர்களை கேலி செய்யும் வகையில் ட்வீட் செய்துள்ளார் பிக் பாஸ் 3 சர்ச்சை நடிகை. வலிமை படத்தின் அப்டேட் தாமதவாமதால் கடுப்பான அஜித் ரசிகர்கள் மதுரையில் வலிமை அப்டேட் காணவில்லை என்று போஸ்டர் கூட அடித்தனர்.நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர். அஜித் ரசிகர்கள் பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி பிரச்சாரத்திற்கு சென்ற போது வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேட்டு இருந்தனர்.

-விளம்பரம்-

அதே போல சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டு இருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியை அழைத்து அவரிடம் வலிமை அப்டேட்டை கேட்டு இருந்தனர் அஜித் ரசிகர்கள்.அவ்வளவு ஏன்பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக நேற்று (பிப்ரவரி 14) தமிழ் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியிடமே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் வரமுறை இல்லாமல் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அப்டேட் கேட்கும் ரசிகர்களால் கடுப்பான அஜித் தனது ரசிகர்களின் செய்யல்பாட்டால் வருந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்தியா மற்றும் இங்காலத்து போட்டியில் ஆட்டநாயகனாக விளங்கிய அஸ்வின் தனது யூடுயூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தன்னிடமும் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டதாக தெரிவித்துளளார்.

வீடியோவில் 11 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

அந்த வீடியோவில் பேசிய அவர், தமிழ்நாட்டில் நாம் திரைப்படங்களை எவ்வளவு என்ஜாய் செய்கிறோம், அதன்மீது எப்படி பைத்தியமாக இருக்கிறோம் என்பதற்கு ஒரு உதாரணம் எனக்கு இந்த போட்டியின்போது நடைபெற்றது. நான் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்தபோது திடீரென்று ஒருத்தர் வந்து அஸ்வின் ‘வலிமை அப்டேட் எப்படி’ என்று கேட்டார். அவர் அப்படிக் கேட்டதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் அதன்பின்னர் கூகுள் செய்து பார்த்தால் என்னடா இது என்று எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. வலிமை அப்டேட் பற்றி மேட்ச்சின் போது கேட்டாள் என்ன செய்வது. அதன் பின்னர் மோயின் அலி என்னிடம் வந்து வலிமை என்றால் என்ன என்று கேட்டார். எப்பா நீங்க கலக்கிட்டீங்க. மாஸ்டர் படம் எல்லாம் கிரேட் ஆனால் வலிமை அப்டேட்டை இங்கிலாந்து பிளேயர் இடம் கேட்டது எல்லாம் அவுட் ஸ்டாண்டிங் அதை எல்லாம் என்னால் மறக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement