போதைல இருக்கீங்களா. வாணி போஜனிடம் ட்விட்டரில் வழிந்த நடிகர். கலாய்த்த நெட்டிசன்கள்.

0
13978
Ashok-selvan
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடித்து வரும் பல நடிகைகள் பலரும் தொலைக்காட்சி தொடர்களில் இருந்தும், விளம்பரங்களில் இருந்தும் தான் வந்தவர்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைக்கிறார் நம்ம வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சூப்பர் ஹிட் கொடுத்த சீரியல்களில் “தெய்வமகள்” சீரியலும் ஒன்று. இந்த சீரியலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழ்ந்து வந்தார்கள் என்று கூட சொல்லலாம். இந்த சீரியலில் “சத்யா” என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

அதிலும், சத்யா என்பதைவிட தாசில்தார் என்று தான் அவரை அதிகம் அழைப்பார்கள். நடிகை வாணி போஜன் முதலில் மாயா என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். தெய்வமகள் சீரியல் மூலம் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூட சொல்லலாம் .அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். மேலும், வாணி போஜன் தெய்வமகள் சீரியலுக்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை. இதனால் பல ரசிகர்கள் ஏன்? சீரியலுக்கு வரவில்லை ஏன்? நடிக்கவில்லை என பல கேள்விகளை இணையங்களில் எழுப்பி வந்தனர்.

இதையும் பாருங்க : மணிவண்ணன் மறைவால் அவரது மனைவிக்கு ஏற்பட்ட நிலை. இவங்களா இப்படி ஆகிட்டாங்க.

- Advertisement -

இதனைத்தொடர்ந்து வாணி போஜன் அவர்கள் சினிமா திரையில் நடிக்க போகிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. இதனால் வாணி போஜன் ரசிகர்கள் பயங்கர குஷியில் இருப்பதாக தெரிவித்து உள்ளனர். தெலுங்கு நடிகர் விஜய் தேவர் கொண்டா தயாரிக்கும் முதல் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் தேவர் கொண்டா நடித்து சூப்பர் ஹிட்டான ‘பெல்லி சூப்புடு’ என்ற படத்தை இயக்கிய தருண் பாஸ்கர் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

இதனை தொடர்ந்து வாணி போஜன் தமிழில் உருவாகி வரும் ஓ மை கடவுளே என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் சூது கவ்வும், தெகிடி போன்ற படங்களில் நடித்த அசோக் செல்வன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். மேலும், அவருக்கு ஜோடியாக இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் வாணி போஜனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் அசோக் செல்வன், தனது ட்விட்டர் பக்கத்தில், நீங்கள் மிகவும் அழகு வாணி போஜன் என்று ட்வீட் செய்த்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த டீவீட்டை கண்ட பலரும், ஒரு சமூக வலைதளத்தில் நடிகையிடம் இப்படியா வழிவது என்று கலாய்க்க துவங்கிவிட்டனர். மேலும், ஒரு சிலரோ என்ன போதையில் இருக்கிறீர்களா, இது ட்விட்டர், வாட்ஸ் அப் கிடையாது என்றும் பதிவிட்டு கலாய்த்து வந்தனர். ஆனால், நெட்டிசன்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அசோக் செல்வனின் இந்த டீவீட்டுக்கு பதில் அளித்த வாணி போஜன், அசோக் செல்வன் மிகவும் திறமையான மற்றும் ஹாட்டான நபர் பதிவிட்டிருந்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் என்ன தான் நடக்கிறது என்று ரசிகர்கள் குழம்பி போனார்கள்.

Image result for oh my kadavule vani bhojan"

இந்த நிலையில் இந்த குழப்பத்திற்கு எல்லாம் பதில் அளிக்கும் விதமாக ட்வீட் ஒன்றை செய்திருந்தார் அசோக் செல்வன், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் தங்களுக்கு தொகுப்பாளினி அஞ்சனா கொடுத்த ஒரு சவால்தான் இது என்றும். எனவே, நான் போதையில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளஅசோக்செல்வன் ஓ மை கடவுளே படத்தின் ஹேஷ்டேகையும் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பம் நீங்கி நிம்மதி அடைந்தனர்.

Advertisement