கடந்த ஆண்டு ப்ளூ சட்டையை என்று விமர்சித்து இன்று அவருக்கு நன்றி தெரிவித்த அசோக் செல்வன் – போர் தொழில் வெற்றி கொடுத்த மாற்றம்.

0
2297
Bluesattai
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

ஆனால், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து தான் வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். மேலும், தன்னைத்தானே விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். படத்தில் இருக்கும் நிறைகளை பேசுவதைவிட குறைகளை பேசுவது தான் அதிகம். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன.

- Advertisement -

ஆனால், உண்மையில் ஒரு சில சமயத்தில் நல்ல படங்களுக்கு நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘போர் தொழில்’ படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்து இருந்தார். இவரது இந்த விமர்சனத்தை பார்த்து சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ சட்டைக்கு நன்றி தெரிவித்தார்.

அதற்கு அசோக் செல்வனும் கையெடுத்து கும்புடம் எமோஜியை போட்டு நன்றி தெரிவித்து இருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்த ஆண்டு அதிகம் Flop கொடுத்த நடிகர்களின் படங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த ஆண்டு அசோக் செல்வன் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என்று இந்த ஆண்டு அதிகம் Flop கொடுத்த நடிகர் என்று ப்ளூ சட்டை பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் அசோக் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் “குரைக்கும் நாய்களை கண்டு கொள்ளாமல் முன்னோக்கி செல்வோம்” என்று பதிவிட்டு இருந்தார். அசோக் செல்வனின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் அசோக் செல்வன் ப்ளூ சட்டையை தான் சொல்கிறார் என்று கமன்ட் செய்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசோக் செல்வனின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்து இருந்தார் ப்ளூ சட்டை மாறன்.

அதில் ‘ட்விட்டர் மூலம் குலைப்பதால் ஒரு பிரயோஜனம் இல்ல குழந்த. தயாரிப்பாளர் பணத்தை வீணடிக்க வேண்டாம். ஒரே ஆண்டில் 5 flop என்பது எல்லாம் பெரிய சாதனை. வருங்காலத்தில் எந்த ஒரு நடிகரும் அதை முறியடிக்க முடியாது. உன் திறமையை வளர்க்க முயற்சி செய். என்னிக்கையை விட தரம் தான் முக்கியம். பிஸ்கெட்ட என்ஜாய் பண்ணு’ என்று பதிலடி கொடுத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement