ஹிந்தியில் பேசிய தொகுப்பாளருக்கு மேடையிலேயே இயக்குனர் அட்லீ கொடுத்திருக்கும் பதிலடி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் ஆர்யா-நயன் நடித்த ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி தந்து இருந்தது.
பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்திய அளவில் 1100 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது.
அட்லீ திரைப்பயணம்:
மேலும், இவர் இயக்கிய ஐந்தே படங்களிலேயே மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கிறார். இதனை அடுத்து அட்லீ தன்னுடைய அடுத்த படத்திற்கான கதையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் அந்த படத்தில் விஜய்- ஷாருக்கான் இருவரையும் வைத்து இயக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அட்லீ கலந்து கொண்டிருந்தார்.
Bro simply said Hindi theriyathu ponga da 😭 @Atlee_dir
— Sankalp Ayan™ (@iBeingSankalp) February 24, 2024
pic.twitter.com/522sS7tXWS
அட்லீ கொடுத்த பதிலடி:
அப்போது மேடையில் அட்லீ வந்து அமர்ந்ததுமே தொகுப்பாளர் ஹிந்தியில் நீண்ட நேரமாக பேசி அவரை வரவேற்று இருந்தார். காரணம், அட்லிக்கு இந்தி தெரியாது என்பதனால் தான் அவர் இந்தியில் பேசி இருந்தார். உடனே அட்லி அவர்கள், நான் நல்லா இருக்கேன், நீங்க? என்று தமிழில் பதில் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு அந்த தொகுப்பாளர் ஷாக் ஆகி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அட்லீ குடும்பம்:
இதனிடையே அட்லீ அவர்கள் பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ப்ரியா அவர்கள் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார்.
அட்லீ மகன் பிறந்தநாள்:
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா, அட்லீயை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் பிரியா நடிப்பதை நிறுத்தி விட்டார். ஆனால், ப்ரியா அட்லீ எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். மேலும், அட்லீ-பிரியா இருவருக்கும் மீர் என்ற மகன் கடந்த ஆண்டு பிறந்தார். சமீபத்தில் இவர்கள் இருவரும் தங்கள் மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்கள்.