இதானால் தான் அவள் நடிப்பதை விட்டுவிட்டால். மேடையில் கூறிய பிரியாவின் கணவர் அட்லீ.

0
66791
Atlee-Priya

தமிழ் சினிமா திரை உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் அட்லி திகழ்ந்து வருகிறார். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ள திரைப்படம் தான் “பிகில்”. மேலும்,பிகில் படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூல் வேட்டையும் அள்ளித் தந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து விஜய்யின் பிகில் படம் ரசிகர்களிடையே வெறித்தனமாகி உள்ளது. இயக்குனர் அட்லீ அவர்கள் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டவர்.

Video Source Galatta

அட்லீ பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரியாவை திருமணம் செய்து கொண்டார். இயக்குனர் அட்லீ , கனா காணும் காலங்கள் சீரியல் தொடங்கி பல சீரியல்கள் நடித்தும், வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்த பிரியாவை காதலித்தார். பின் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும், நடிகை பிரியா சின்னத்திரையில் நடித்தாலும் சினிமாவில் அறிமுகமானது என்னவோ சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தில் தான்.

- Advertisement -

இந்த படத்தில் அனுஷ்காவின் சகோதரியாக நடித்திருந்தார் நடிகை பிரியா. அதன் பின்னர் நான் மஹான் அல்ல, சிங்கம் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார் பிரியா. ஆனால், திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டார் பிரியா. இந்த நிலையில் பிரியா ஏன் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்ற காரணத்தை சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் பேசியுள்ளார் அட்லீ. இதுகுறித்து பேசிய அவர், அவளுக்கு என்ன பிடிக்கும் என்பதை பல முறை கேட்டிருக்கிறேன். அவளுடைய திறமை என்ன என்பது எனக்கு தெரியும்.

Video Source : Galatta

கண்டிப்பாக அவர் என்னுடைய தயாரிப்பில் நடிப்பார். கண்டிப்பாக அவர் விரைவில் திரும்ப வருவார். எனக்காக தான் நடிப்பை அவர் விட்டுவிட்டார் என்பது எனக்கு தெரியும். நான் கூட சொன்னேன், உனக்கு விருப்பமிருந்தால் நடி என்று, ஆனால் அவள் தான் கொஞ்சம் நாள் போக வேண்டும் என்று கூறிவிட்டார். அவள் மிகவும் திறமைசாலி, அவளுடைய திறமையை வெளியில் கொண்டு வருவேன். கூடிய விரைவில் அது நடக்கும் என்று கூறியுள்ளார் அட்லீ.

-விளம்பரம்-
Advertisement