நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. ஒட்டுமொத்த உலகையும் இந்த கொரோனா வைரஸ் தான் ஆட்டி படைத்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவை இன்னும் 10, 15 நாள் என்று நீட்டித்து கொண்டே செல்கிறார்கள். இன்னும் எத்தனை நாள் இந்த பிரச்சனை நீட்டிக்குமோ? என்ற கவலையில் மக்கள் உள்ளார்கள். தற்போது இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30000 நெருங்கியது மற்றும் 934 பேர் பலியாகியும் உள்ளனர்.
மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்றும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தான் வெளியில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும், திரையரங்கள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. மேலும், திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகை த்ரிஷா அவர்கள் ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருப்பது குறித்து சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியது, நான் ஒரு சுதந்திர பறவை. நான் எப்போதும் என் தோழிகளுடன் அரட்டை அடித்து கொண்டும், ஜாலியாக சுற்றி கொண்டும் தான் பிசியாக இருப்பேன். படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் நான் அவர்களுடன் ஊர் சுற்றுவேன்.
இது தான் என்னுடைய பொழுது போக்கு. ஆனால், இப்போது வீட்டிலே இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. என் தோழிகளுடன் கூட வீடியோ காலில் பேசி விடுகிறேன். ஆனால், படப்பிடிப்புக்கு சென்று கேமரா முன்னால் நடிக்காமல் இருப்பது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்று கூறி உள்ளார். தற்போது இந்த கருத்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக நம்பர் 1 நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகை த்ரிஷா பரமபதம், கர்ஜனை, ராங்கி, சுகர் என அடுத்தடுத்து பல படங்கள் தன் கைவசம் வைத்து உள்ளார்.